ஓ... அப்படீங்களா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓ... அப்படீங்களா?

Added : அக் 10, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 ஓ... அப்படீங்களா?

காஞ்சிபுரம் மாவட்டம், சோத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகலைச்செல்வன். 48; வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர். இவர், மே மாதம், காட்டாங்கொளத்துார் வட்டாரத்தில் இருந்து, இங்கு பணி மாறுதலில் வந்தார். திறமையான, 'ஆளுமை' உடையவர். இவரது, 'வீக்னஸ்' தெரிந்து, பல ஊராட்சி செயலர்கள், 'காரியம்' சாதித்து கொள்கின்றனர். செங்கல்பட்டில் இருக்கும், பெண்கள் அழகு நிலையத்தில் தான் பல, 'டீல்'களை பேசி முடிப்பார். பல ஊராட்சி செயலர்களை, 'பணக்காரர்கள்' ஆக்கிய, 'பெருமை' இவருக்கு உண்டு. திட்ட இயக்குனர், கலெக்டர் என, உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர். ஊழல் செய்யும் அதிகாரிகளைக் கண்டால், 'கறாராக'ப் பேசி விடுவார். விடுமுறை தினங்களிலும், வாலாஜாபாதில் தான் இருப்பார். அந்த அளவுக்கு, 'தொழில் பக்தி' கொண்டவர்.

வாலாஜாபாதைச் சேர்ந்தவர் நாகராஜ், 40; ஏனாத்துார் ஊராட்சி செயலர். 10ம் வகுப்பு மற்றும் தொழிற்பயிற்சி படித்து, 1997ல், பணியில் சேர்ந்துள்ளார். வாலாஜாபாத் அலுவலகத்திலேயே, பி.டி.ஓ.,வுக்கு, 'ஒத்தாசை'யாக இருப்பார். எந்த, பி.டி.ஓ., பதவிக்கு வந்தாலும், அவர்களுக்கு, 'சகல சவுகரியங்கள்' செய்து கொடுப்பார்.

ஏனாத்துார் ஊராட்சி செயலர் நாகராஜின் மனைவி சுஜாதா, 38; இளங்கலை வணிகவியல் படித்துள்ளார். 2004ல், கணவர் தயவில், தொள்ளாழி ஊராட்சி செயலராக சேர்ந்தார். முன்னதாக, அறிவொளி இயக்கத்தில், தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்தார். தொள்ளாழி ஊராட்சியில், 'வருவாயை' மேம்படுத்த முயன்றார்; அதற்குள், கடந்த ஆண்டு நவம்பரில், வாரணவாசி ஊராட்சிக்கு பணிமாறுதல் பெற்றார். பி.டி.ஓ.,க்களின் பணிகளை, 'மெச்சி'ப் பாராட்டி, ஊராட்சி நிர்வாகத்தை, பொறுப்பாக கவனித்து கொள்பவர்!

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
16-அக்-201811:49:44 IST Report Abuse
Jayvee அப்படியே தாம்பரம் சேல்ஸ் Tax ஆபீஸ், சைதாப்பேட்டை பத்திரப்பதிவு ஆபீஸ் இவற்றையும் பார்க்வும்..
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-அக்-201810:00:48 IST Report Abuse
D.Ambujavalli If such informations come to the notice of 'main office' or the ministers concerned they will grab the 'booty' Very helpful news to them.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
14-அக்-201809:47:51 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மக்கள்பணத்துலே பலரை கோடீஸ்வரா ஆக்கினாள் என்னகிட்டும் எவ்ளோகிட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X