சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள்: சிறப்பு நீதிமன்றம் அமைத்தல் அவசியம்

Updated : ஆக 18, 2019 | Added : அக் 10, 2018
Advertisement
துணை வேந்தர்கள் நியமனம், முறைகேடு,  சிறப்பு நீதிமன்றம்,

'தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், லஞ்சம் விளையாடியது' என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், சமீபத்தில் கவலை தெரிவித்திருக்கிறார். பல்கலைக்கழக நியமனங்களில், லஞ்சம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது, அனைவரும் அறிந்த வெளிப்படையான ரகசியம் தான்.எனினும், இதை பல்கலைக்கழகங்களின் வேந்தராகிய, கவர்னரே ெவளிப்படையாக தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டியது.

உயர் கல்வித் துறையில் நிலவும், ஊழல் முறைகேட்டை களைய, இது உதவியாக இருக்கும்.மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக, இது வரை தகவல் இல்லை. ஆனால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின், பல்கலைக்கழகங்களின், துணைவேந்தர்கள் நியமனங்களில், பரவலாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.ஊழலின் ஆணி வேர்தமிழக ஆட்சியாளர்களிடம், இயற்கையாகவே இருக்கும், ஊழல் போக்கு காரணமாக, உயர் கல்வித் துறையில் முறைகேடுகள், வேரூன்ற ஆரம்பித்தன.

துணைவேந்தர்கள் நியமனங்கள் மூலம் கிடைக்கும், லஞ்ச பணத்தைப் பங்கு போடுவதில், முந்தைய கவர்னர்களும், அவர்களின் கூட்டாளிகளும், மிகுந்த ஆர்வம் காட்டி வந்துஉள்ளனர்.இடைத்தரகர்கள் மூலம், இத்தகைய வசூலில், முந்தைய கவர்னர்கள் ஈடுபட்டு வந்தது, பலருக்கு தெரிந்தும், அதைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துணைவேந்தர்களை கண்டறிவதற்கான, தேடுதல் குழுவில் இடம் பெறுவதற்கு கூட, லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.தேடுதல் குழு மூலம், துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும், மூன்று பேர் பட்டியல், இறுதி செய்யப்பட்டதும், குறிப்பிட்ட நபரை, துணைவேந்தராக தேர்வு செய்ய, அமைச்சர் அலுவலகம் மற்றும் கவர்னரின் ஏஜென்ட் மூலம், பேரம் பேசப்படும்.

சிறிய பல்கலைக் கழகங்களுக்கு, 5 கோடி ரூபாய். நுாற்றுக்கணக்கான பொறியியல் கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கு, 50 கோடி ரூபாய் வரை, பேரம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லுாரிகளிடமிருந்தும், பல்கலைக்கழகத்தில் செய்யப்படும், பல்வேறு நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு மூலமும், இந்த தொகையை வசூலித்துக் கொள்ளலாம் என்றே பேரத்தை ஏற்கின்றனர்.இது மட்டுமின்றி, கல்வித் துறையின் அனைத்து மட்டங் களிலும், ஊழல் முறைகேடு ஊடுருவியுள்ளது. அதனால் தான், பல பல்கலைக்கழகங்கள், தற்போது, லஞ்சம் மூலம் நியமிக்கப்பட்ட, தகுதியற்ற ஆசிரியர்களை கொண்டுள்ளன; துணைவேந்தரை சரிகட்ட, லஞ்சம் கொடுப்பதற்காக தவறான வழிமுறைகளைக் கையாள்கின்றன.2012ல் புகார் மனுதுணைவேந்தர்கள் நியமனத்தில், வெளிப்படைத்தன்மை இல்லை யென்றும், தகுதியானவர் கள்தான், துணைவேந்தர் களாக நியமிக்கப்படுகின்றனரா...

என்றும், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம், நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக, பிரபல கல்வியாளர்கள் கவலை கொண்டனர்.அவர்களுடன், கல்வித்துறையின் அவலநிலை குறித்து கவலை கொண்டவர்களும், 2012ம் ஆண்டு, ஜூலை, 30ல், அப்போதைய கவர்னர், ரோசய்யாவிடம் புகார் மனு கொடுத்தனர். அரசியல் ரீதியாக, துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதாகவும், துணைவேந்தர் பதவிகள், ஏலம் விடப்பட்டு, அதிக தொகை கொடுப்பவரே, அந்த பதவியில் நியமிக்கப்படுகின்றனர் எனவும், புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழக கவர்னராக இருந்த, எஸ்.எஸ்.பர்னாலாவின் மகன், இது போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது உட்பட, 13 ஊழல் குற்றங்கள், அதில் விலாவரியாக குறிப்பிடப்பட்டிருந்தன. துரதிருஷ்டவசமாக, அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கவர்னருக்கு அப்பாற்பட்டுகவர்னரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நிலையிலும், கல்வித்துறையில் ஊழல் நடைபெற்று வருகிறது. அரசு நிதி உதவி பெறும் கல்லுாரிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, மாநில கல்வி அமைச்சர்கள், தாமதம் செய்கின்றனர்.

காலியாக உள்ள பதவிகளுக்கு ஏற்ப, கல்லுாரி நிர்வாகத்திடமிருந்து, உரிய தொகை வரும் வரை, தாமதம் தொடர்கிறது.தாங்கள் கொடுத்த லஞ்ச பணத்தை, நியமிக்கப்படும் ஆசிரியர்களிடமிருந்து, கல்லுாரி நிர்வாகம் பெற்றுக் கொள்கின்றன. லஞ்சம் கொடுத்து, பணி நியமனம் பெறும் ஆசிரியர்கள், தங்கள் பங்கிற்கு, மாணவர்களிடமிருந்து பணம் பெறுவது போன்ற, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இதனால் தான், அரசு நிதி பெறும் கல்லுாரிகளுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிப்பது இல்லை.அது போல, பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவர்களிடமும், அவர்களின் வழிகாட்டிகளாக இருக்கும் பேராசிரியர்கள், பணம் கேட்பதாக கூறப்படுவது, கதை போல் தோன்றினாலும், அது உண்மை தான். ஆராய்ச்சி மாணவர்களுக்கு, இறுதி அங்கீகாரம் வழங்குவதற்கு முன், பாலியல் தொந்தரவு மற்றும் பணம் கேட்டல் போன்ற முறைகேடுகளை, வழிகாட்டிகளாக விளங்கும், ஆராய்ச்சி மேற்பார்வையாளர்களான, பேராசிரியர்கள் வற்புறுத்துகின்றனர்.

புதிய கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் காணப்படும் ஊழல், மற்றொரு கவலைக்குரிய விஷயம். இந்த முறைகேடுகள் மூலம், பல தகுதியில்லாத நிறுவனங்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் விஷயத்திலும், இவ்வாறே நடந்துள்ளது.இதற்கு தீர்வு தான் என்ன?பல்கலைக்கழக நியமனங்களில் அரசியல் தலையீடு அறவே நீக்கப்படும் வரை, இந்த பிரச்னைக்குத் தீர்வு காண்பது எளிதல்ல. எதிர் காலத்தில், இப்போதைய கவர்னர், பன்வாரிலால் போன்றவர்கள், கவர்னர்களாக வருவர் என்பதற்கு, எவ்வித உத்தரவாதமும் இல்லை.தேடுதல் குழுவில், கவர்னரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர், சிறந்த கல்வி நிபுணராகவும், சிறந்த நபராகவும் இருத்தல் அவசியம்.

ஊழல் முறைகேடு மூலம், பதவி பெறும் துணைவேந்தர்கள், ஆசிரியர்களை, தகுதி அடிப்படையில் நியமிப்பதில்லை.அவர்களிடமிருந்து எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே, நியமிக்கின்றனர். அத்தகைய நபர்களைக் கண்டறிந்து, அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது சிரமம் என்றாலும், எதிர்கால சந்ததியினருக்கு இது ஒரு பாடமாக அமையும்.தமிழகத்தை பொறுத்தவரை, உயர்கல்வித் துறை பிரச்னைகளைக் கையாள, ஒரு கண்காணிப்பு அமைப்பு தேவை.

தனி நபர்கள் அல்லது அரசியல்வாதிகள், ஏன், கவர்னர் மீதாக இருந்தாலும், குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக ஆராய்ந்து, தவறு நடைபெற்றிருந்தால், கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.கல்வித்துறை முறைகேடுகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் நியமிப்பதும், சிறந்த வழியாக இருக்கும்.

டாக்டர் எம்.அனந்த கிருஷ்ணன்,கல்வியாளர்இ-மெயில்: ananda1928@gmail.com

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X