பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தீவிரம்!
பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த திட்டம்
பாலியல் சம்பவ அம்பலத்தால் நிறுவனங்கள் அதிரடி

புதுடில்லி : பணி இடங்களில், தங்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களில் பெண்கள் வெளியிட்டு வருவதால், பெண்களுக்கு பாதுகாப்பான, பணி இட சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

பெண்கள்,பாதுகாப்பு,திட்டம்,நிறுவனங்கள்,அதிரடி


அமெரிக்காவில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்கள், 'மீ டூ கேம்பெய்ன்' என்ற பெயரில், இணையதளத்தில் புகார்கள் கூறி வருகின்றனர். அதேபோல், நம் நாட்டிலும் பல பெண்கள், சமீப காலமாக, கடந்த காலத்தில் நடந்த பாலியல் புகார்களை கூறி, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் உட்பட, பல பிரபலங்கள் மீது, இதுவரை புகார்கள் கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளியுறவு இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, எம்.ஜே.அக்பர் மீது, பெண் பத்திரிகையாளர், பிரியா ரமணி, பாலியல் புகார் கூறியது, அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்பர் மீது, இதுவரை, ஆறு பெண்கள் பாலியல் புகார்களை கூறியுள்ளனர்.

இந்நிலையில், பணி இடங்களில், தங்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களில் பெண்கள் வெளியிட்டு வருவதால், பெண்களுக்கு பாதுகாப்பான, பணி இட சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. உலகம் முழுவதும் கிளைகளை பரப்பியுள்ள, பிரபல குளிர்பான நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது.

அப்போது, நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், பெண் ஊழியர்களின் உடை தொடர்பாக, ஆபாச மாக பேசுவதாக, நிறுவன இயக்குனர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அதிகாரி, உடன் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

'பெப்சி இந்தியா' நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, அதன் தலைவர், அஹமது எல் ஷேக் கூறிய தாவது: எங்கள் நிறுவனத்தில், 40 சதவீதம் பேர், பெண் ஊழியர்கள். பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தக்கூடாது என, ஆண் ஊழியர்களிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம்.

இதற்காக, ஆண் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதித்ய பிர்லா குழுமத்தின் மனித வள பிரிவு இயக்குனர், சந்த்ரூப் மிஸ்ரா கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில், பணி சூழல் அமைய வேண்டும். அதற்கு, தேவையான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டல் மற்றும் நுகர்பொருள் துறையில் ஜாம்பவானாக திகழும், ஐ.டி.சி., நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் விஷயத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.

சமூக வலைதள நிறுவனமான, பேஸ்புக், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில், தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, இணையதளத்தில் விரிவாக வெளியிட்டுள்ளது.

''பெண்களை துன்புறுத்துவது, பாகுபாடு பாராட்டல், பழிவாங்குதல் போன்றவை ஏற்க முடியாத விஷயங்கள்,'' என, பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.

சட்டம் சொல்வது என்ன?


பணி இடங்களில், பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தினால் தண்டனை அளிக்கும் வகையில், 2013ல், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து, அந்த சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வரையறை விபரம்:
* நேரடியாக அல்லது மறைமுகமாக, பாலியல் ரீதியிலான நடத்தை
* பெண்களை தொடுதல், அவர்களை அத்துமீறி நெருங்குதல்
* பாலியல் ரீதியிலான தேவையை பூர்த்தி செய்யும்படி நிர்ப்பந்தம் செய்தல்
* பாலியல் ரீதியில் வார்த்தைகளை பேசுதல்
* ஆபாச படங்களை, பெண்களிடம் காண்பித்தல்.

10 ஆண்டு சிறை :


கடந்த, 2013ல், இயற்றப்பட்ட சட்டப்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் நிகழாத வகையில், பணி இடத்தை பாதுகாப்பானதாக வைத்திருக்கும் பொறுப்பு, அந்த நிறுவன உரிமையாளரையே சேரும்.

Advertisement

இதுகுறித்த விதிகள்:
* பாலியல் பலாத்காரம் தடுப்பு சட்டம் தொடர்பான விதிகள், அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்
* விதிமீறல்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும்
* குறைந்தபட்சம், 10 அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில், பாலியல் புகார் குறித்து விசாரிக்க, உள்ளார்ந்த குழு அமைக்கப்பட வேண்டும்
* பெண் ஊழியர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
* பெண் ஊழியர்களை அத்துமீறி தொட்டால், 1 - 5 ஆண்டு சிறை
* பெண் ஊழியரை, அவருக்கு தெரியாமல் படம் பிடித்து, வெளியிட்டால், 1 - 7 ஆண்டு சிறை
* கீழ் நிலை பெண் ஊழியரிடம் பாலியல் உறவு வைத்தால், 5 - 10 ஆண்டு சிறை.

'அக்பர் பதவி விலகணும்'

காங்., மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி, நிருபர்களிடம் நேற்று கூறிய தாவது: தன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார்கள் குறித்து, அமைச்சர், எம்.ஜே.அக்பர் தக்க விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, காங்., செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரி, நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''இந்த விஷயத்தில் அமைச்சர் அக்பர் மவுனம் சாதிக்க முடியாது; இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்தே தீர வேண்டும்; இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்,'' என்றார்.


சோலி சொராப்ஜி மறுப்பு :

முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி மீது, ஒரு பெண் வழக்கறிஞர், பாலியல் புகார் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து, சோலி சொராப்ஜி கூறியுள்ளதாவது: என் மீது புகார் கூறியுள்ள பெண், இதுபோல் பலர் மீது புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருப்பவர். அந்த பெண் கூறியுள்ள புகார்கள், ஆதாரம் அற்றவை. அவர் கூறியுள்ள புகார் எனக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவருக்காக வருந்துகிறேன். அந்த பெண் மீது, சட்ட நடவடிக்கை எடுத்து, அவரை கவுரவப்படுத்த விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
11-அக்-201815:52:59 IST Report Abuse

sahayadhasபணி பெண்களுக்கு பாதுகாப்பை அரசே கெடுத்து விட்டது. பணி, அது சார்ந்த விளக்கம் அனைத்தும் Whatsapp ல் பரிமாறப்படுகிறது. நாளைடைவில் அது காதல் காமமாக மாறி விடுகிறது.

Rate this:
kannan - Madurai,இந்தியா
11-அக்-201812:28:25 IST Report Abuse

kannanஇங்கு கருத்திடும் பல பேர் ஒரு தவறான கருத்தை முன் வைக்கிறார்கள். அது, " கள்ளத்தொடர்பு கொள்வது தவறில்லை என்று கோர்ட் சொன்னதாக" சொல்கிறார்கள். அவர்கள் கோர்ட் சொன்னதை தவறாக புரிந்து கொண்டவர்கள் என்று நினைக்கிறேன். கள்ளத்தொடர்பில் ஆண்களை மட்டும் குற்றம் சாட்டும் பிரிவை மட்டுமே நீக்க சொல்லியிருக்கிறார்கள். சரி இப்போ இந்த பாலியல் வழக்குக்கு வருவோம். பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டம் சரியானது தான் அதை சரியாக பயன்படுத்தும்போது. இந்த சட்டத்தை பெண்கள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Rate this:
Nisha Rathi - madurai,இந்தியா
11-அக்-201814:59:18 IST Report Abuse

Nisha Rathiஉண்மைதான் கண்ணன் ...

Rate this:
rajan. - kerala,இந்தியா
11-அக்-201809:59:32 IST Report Abuse

rajan.  UNLESS AND OTHERWISE YOU PERMIT NOBODY ELSE CAN SPOIL YOU IS A STRONG PHILASOPHY LAID UPON OUR TREDITIONAL CULTURE OF LADIES. BUT NOW IT IS BADLY TURNISHED. WHY? BOTH GERNDERS ARE WARMING-UP EACH OTHER WITHOUT MINDING THE CULTURE OF "DON'T MISS THE KISS & DON'T KISS THE MISS" THIS TOO PERMITED BY LAW? A MILLION DOLER QUESTION FOR THE MAN MADE SOCIETY.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X