பொது செய்தி

தமிழ்நாடு

அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய தம்பதி

Added : அக் 10, 2018 | கருத்துகள் (19)
Advertisement
அடையாறு புற்றுநோய் மையம், கேவி சுப்பாராவ், சுப்பாராவ் மனைவி பிரமிளா ராணி,  40 ஏக்கர் நிலம் தானம், கும்மிடிப்பூண்டி , சூரப்பூண்டி கிராமம், பிரமிளா ராணி, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையம்,சுப்பாராவ் பிரமிளா ராணி  தம்பதி,
Adyar Cancer Center, KV Subbarao, Subbarao wife, Pramila Rani, 40 acres of land donated, Gummidipoondi, Surapoondi village,  Pramila Rani, Madras Adayar Cancer Medical Center, Subbarao Pramila Rani couple,

கும்மிடிப்பூண்டி : சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு, எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கிய தம்பதியின் செயல், பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ஆந்திர மாநிலம், ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர், கே.வி.சுப்பாராவ், 74. அவரது மனைவி பிரமிளா ராணி, 65. இவர்களுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, சூரப்பூண்டி கிராமத்தில் உள்ளது.அந்த நிலத்தை, அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு, பத்திரப் பதிவு செய்து, தானமாக நேற்று வழங்கினர். தற்போதைய சந்தை மதிப்பு படி, அந்த நிலத்தின் மதிப்பு, எட்டு கோடி ரூபாய்.

நிலத்தை தானமாக வழங்கிய சுப்பாராவ் கூறியதாவது: என் தந்தை கிருஷ்ணய்யா, 1974ல், புற்றுநோயால் இறந்தார். அந்த சமயத்தில், புற்றுநோய்க்கு போதிய மருத்துவ சிகிச்சை வசதி இல்லை. அப்போது அறிதாக இருந்த, புற்றுநோய், தற்போது பரவலாக காணப்படுகிறது. அடையாறு புற்றுநோய் மையம், மனிதாபிமான அடிப்படையில், நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சையை சிகிச்சையை, சேவையாக வழங்கி வருகிறது. அந்த மையத்திற்கு, எங்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், 40 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளோம். இவ்வாறு, சுப்பாராவ் தெரிவித்தார்.

உடன் பிறந்தவருக்கு கூட, 1 அடி இடத்தை விட்டு கொடுக்க மறுக்கும், சுயநலம் மிக்கவர்கள் வாழும் இந்த கால கட்டத்தில், எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 ஏக்கர் நிலத்தை, தானமாக வழங்கிய தம்பதியை பலரும் பாராட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-அக்-201808:52:53 IST Report Abuse
Srinivasan Kannaiya அந்த பகுதி அரசியல்வாதி ஆட்டயம் போடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
12-அக்-201820:00:41 IST Report Abuse
vns "hats off " என்றும் கூறும் மாயாக்களின் அறிவை நினைத்து சிரிக்கிறேன். மற்றவர்களை நகல் செய்தெ வாழ பழகிவிட்டவர்களுக்கு தாங்கள் என்ன சொல்கிறோம் என்றே புரிவதில்லை. தமிழகத்தில் யார் தொப்பி (hat ) போட்டுக்கொள்கிறார்கள் அப்புறம் யார் தொப்பி எடுப்பதை மற்றவர்களுக்கு செய்யும் மரியாதை என்று நினைக்கிறார்கள் . வீண் பகட்டும் அறியாமையும்தான் தமிழகத்தில் உள்ளன. அறிவுள்ளவர்கள் ஒரு சதவீதம் தமிழகத்தில் இருப்பார்களா என்பதே சந்தேகம் தான்
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
12-அக்-201819:11:58 IST Report Abuse
Endless பரந்த மனம் கொண்ட பெரியவர்கள் திரு கே.வி.சுப்பாராவ் ஐயா, மற்றும் திருமதி பிரமிளா ராணி அம்மையார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டு, அப்படியே எல்லாம் வல்ல இறைவனிடத்தில், இவ்விரு புண்யாத்மாக்களுக்கும் பூரண ஆசீர்வாதத்தையும் அனுகிரஹத்தையும் வழங்குமாறு பிராத்திக்கிறேன் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X