துணைவேந்தர்களை நியமித்த கவர்னர்கள் யார்? Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
துணைவேந்தர்களை நியமித்த
கவர்னர்கள் யார்?

கோடிகளை கொட்டி, துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகார், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், எந்த கவர்னரின் காலத்தில், எந்தெந்த துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர் என்ற பட்டியலை, கல்வியாளர்கள் திரட்டி வருகின்றனர்.

துணைவேந்தர்கள்,நியமித்த,கவர்னர்கள்,யார்?,பன்வாரிலால் புரோஹித்,வித்யாசாகர்,ரோசய்யா


துணைவேந்தர் பதவியை பெறுவது, ஒவ்வொரு பேராசிரியருக்கும் வாழ்க்கையின் லட்சியமாகவும், கனவாகவும் உள்ளது. இதில், அரசியல் மற்றும் அரசின் செல்வாக்கு உள்ளவர்களையே துணைவேந்தர்களாக நியமிக்கும் முறை, 2006ல் துவங்கியது. இந்த நடைமுறையால், முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்புக்கு பின், துணைவேந்தர் நியமன முறைகளில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி மற்றும் நீதித்துறை வல்லுனர்கள் தேடல் குழுவில் நியமிக்கப்படுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் பின்னணி, கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகள் உள்ளதா... என, விசாரிக்கப்படுகிறது.

'தற்போது, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டுமே, துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழக பல்கலைகளில், எந்த துணைவேந்தர்கள், எந்த கவர்னரால் நியமிக்கப்பட்டனர் என்ற விபரங்களை, கல்வியாளர்கள் திரட்டி வருகின்றனர்.

புரோஹித் நியமித்தோர் :


அண்ணா பல்கலை: எம்.கே.சுரப்பா
தமிழ்நாடு சட்ட பல்கலை: தம்ம சூர்யநாராயண சாஸ்திரி
தமிழ்நாடு கால்நடை பல்கலை: சி.பாலச்சந்திரன்
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை: ஷீலா ஸ்டீபன்
பாரதிதாசன் பல்கலை: பி.மணிசங்கர்
பெரியார் பல்கலை: பி.குழந்தைவேல்
அண்ணாமலை பல்கலை: வி.முருகேசன்
அழகப்பா பல்கலை: என்.ராஜேந்திரன்
தஞ்சை தமிழ் பல்கலை: ஜி.பாலசுப்ரமணியன்

முதல்வரின் நியமனம்:


தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலை: பிரமீளா குருமூர்த்தி. அனைத்து பல்கலைகளுக்கும் கவர்னரே வேந்தராக இருப்பார். ஆனால், கவின் கலை பல்கலையின் விதிகளின்படி, தமிழக முதல்வரே வேந்தர். இதன்படி, முதல்வர் பழனி சாமியால், இசை பல்கலையின் துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வித்யாசாகர் நியமித்தோர் :


சென்னை பல்கலை: பி.துரைசாமி

Advertisement

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலை: எஸ்.பெலிக்ஸ்
மதுரை காமராஜர் பல்கலை: பி.பி.செல்லதுரை - நியமன விதிமீறலால் பதவி நீக்கம்.

ரோசய்யா நியமித்தோர் :


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: எம்.பாஸ்கரன்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: கே.பாஸ்கர்
திருவள்ளுவர் பல்கலை: கே.முருகன்
தமிழ்நாடு கல்வியியல் பல்கலை: எஸ்.தங்கசாமி
தெரசா மகளிர் பல்கலை: ஜி.வள்ளி
கோவை பாரதியார் பல்கலைக்கழகம்: ஏ.கணபதி - ஊழல் வழக்கில், 'சஸ்பெண்ட்'
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம்: டாக்டர் எஸ்.கீதாலஷ்மி - இவரது பதவி காலம் முடிய உள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை: கே.ராமசாமி - இவரது பதவி காலம் முடிய உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
11-அக்-201820:48:21 IST Report Abuse

J.Isaacஅரசியல் நாடகம் நடக்கிறது

Rate this:
kandhan. - chennai,இந்தியா
11-அக்-201817:10:51 IST Report Abuse

kandhan.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் போலீஸ் துறையை தானே பார்ப்பது போல இவரின் கட்டுப்பாட்டிலேயே துணைவேந்தர் வேந்தர் நியமனம் பதவி வழங்கினால் என்னவாம் ????எதற்கு மற்ற மாநிலங்களை சேர்ந்த வர்களை தமிழ்நாட்டில் துணை வேந்தர்களாக நியமிக்கவேண்டும் எனவே கவர்னரின் அதிகாரத்தை மாற்றி அமைக்கவேண்டும் அல்லது அந்த கவர்னர் பதவியையே ஒழிக்கவேண்டும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல்வர் இருக்கும் பட்சத்தில் இந்த தேர்வுமுறையை நீக்கவேண்டும் நம் மாநிலத்தில் தமிழ் மற்றும் கைதேர்ந்த பேராசிரியர்கள் இருக்கும் போது எதற்கு இந்த அரசியல் விளையாட்டு ????இதை உடனே மாற்றவேண்டும் இந்த எடுபுடி (அடிமை அரசு)அரசு இருக்கும் வரையில் காவிகளின் ஆதிக்கம் எல்லா துறைகளையும் பார்ப்பனமயமாக்கி இந்த குடுமிகள் எல்லா அட்டூழியங்களையும் செய்கிறார்கள்???? நம் மக்களுக்கு என்றுதான் புத்திவருமோ ????? தெரியவில்லை மெஜாரிட்டி இல்லாத இந்த கோமாளி ஆட்சியை மோடி அரசு எதற்கு தூக்கி பிடிக்கிறது என்று இப்போதாவது புரிகிறதா ??மக்களே ??கொல்லைப்புறமாக தமிழகத்தில் பி ஜே பி கைக்கூலிகள் (மற்ற மாநிலத்தவர்கள்) எப்படி இங்கு இந்த 420 வேலைகளை எப்படி கச்சிதமாக செய்கிறார்கள் என்பதை சிந்தியுங்கள் உண்மை புரியும் ,,,,,...தமிழனின் கல்வித்துறை நிலையும் புரியும் கந்தன் சென்னை

Rate this:
11-அக்-201816:29:28 IST Report Abuse

ஆப்புவி.ராவ் காட்டுல ரெட்டை மழை.. ரெண்டு மாநிலங்களுக்கு கெவுனரா இருந்தவராச்சே....

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X