தமிழ்நாடு

குளறுபடி!* அரசின் வீடு வழங்கும் திட்டத்தில்*வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை

Added : அக் 11, 2018
Advertisement

பந்தலுார்:பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் தேர்வு செய்வதில் பெரும் குளறுபடி நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
வீடில்லாத ஏழைகளுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில், மத்திய அரசு மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பயனாளிகள் தேர்வு செய்வதில், பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன. அதில், நெல்லியாளம் நகராட்சியில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள், அதற்கான பணியாளர்களிடம், குறிப்பிட்ட தொகை 'கவனிப்பாக' அளித்தால் மட்டுமே, அவர்களுக்கு திட்டத்துக்கான தொகை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், சேரங்கோடு ஊராட்சியில் வீடு வேண்டி விண்ணப்பித்தவர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து, அவர்களை தற்போதுள்ள வீட்டின் முன்பாக நிறுத்தி போட்டோ எடுக்க, நுாறு நாள் வேலை திட்ட மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அரசு துறை சார்ந்த அதிகாரிகளாக இல்லாத நிலையில், ஆய்விற்கு செல்லும் போது, ஒவ்வொரு வீட்டிலும் சென்று, மொபைல் போனில் 'போட்டோ' எடுத்து, 200 முதல் 350 ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இதை தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு இல்லாத நிலையில், 'கவனிப்பின்' அடிப்படையில், நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு 'கவனிப்பின்' அடிப்படையில் இலவச வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி அசோக்குமார் என்பவர், மாநில முதல்வருக்கு ஆதாரங்களுடன், புகார் மனு அனுப்பி உள்ளார்.கோட்டைப்பாடி என்ற இடத்தில், பா.ஜ., வின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், ஒரு சிலர், அரசின் வீடு கட்ட அனுமதி வாங்கி தருவதாக, வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிவேல் கூறுகையில், ''இது குறித்து ஏற்கனவே புகார் வந்தது. நான் விசாரணை செய்து வருகிறேன். இந்த குற்ற செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் பொதுமக்கள் உடனே புகார் கொடுக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X