மானாமதுரையில் தெப்பக்குளமாக மாறிய அரசு பஸ் டெப்போ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் தெப்பக்குளமாக மாறிய அரசு பஸ் டெப்போ

Added : அக் 11, 2018
 மானாமதுரையில் தெப்பக்குளமாக மாறிய அரசு பஸ் டெப்போ

மானாமதுரை:மானாமதுரையில் பெய்த கனமழை காரணமாக அரசு பஸ் பணிமனைக்குள் மழைநீர் தெப்பக்குளம்போல் தேங்கியுள்ளதால் பஸ்கள் சகதியில் சிக்கியுள்ளன. மானாமதுரையில் கடந்த 10 வருடங்களுக்கு முன் சிப்காட்டில் துவங்கப்பட்ட அரசு பஸ்பணி மனையில் தொழிலாளர்களுக்கு எவ்வித வசதியும் இல்லாமல் இருந்து வருகிறது.தற்போதுஇரவு நேரங்களில் 7 பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டு அதிகாலையில் மீண்டும் எடுத்துச் செல்லப்படுகிறது.இந்நிலையில்கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானாமதுரையில் பெய்த பலத்த மழையின் காரணமாக பணிமனைக்குள்மழைநீர் தேங்கி நிற்கிறது.இரவில் பஸ்களை டிரைவர்கள் நிறுத்தி விட்டு அதிகாலையில் பஸ்களை எடுத்துச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X