பேரிடருக்காக இந்தியா செலவிட்ட தொகை ரூ.5946 கோடி| Dinamalar

பேரிடருக்காக இந்தியா செலவிட்ட தொகை ரூ.5946 கோடி

Added : அக் 11, 2018
Share
இந்திய தேசிய பேரிடர், ஐநா அறிக்கை, பருவநிலை பேரிடர், பருவநிலை, அமெரிக்கா, சீனா , தேசிய பேரிடர் அபாய குறைப்பு கழகம் , இந்தியா, ஐக்கிய நாடுகள்,  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை,  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை , ஐ.நா., 
Indian national calamity, UN report, climate crisis, climate, USA, China,
National Disaster Risk Reduction Corporation, India, United Nations, United Nations Security Council, UN,America,

ஐ.நா : 1998 ம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு வரையிலான கடந்த 20 ஆண்டுகளில் தேசிய பேரிடருக்காக இந்தியா செலவிட்ட தொகை 80 பில்லியன் டாலர்கள் (ரூ.5946 கோடி) என ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடரால் பொருளாதார அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 இடத்தில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பேரிடர்களால் இந்தியாவின் பொருளாதார இழப்பு 120 சதவீதம் அதிகரித்துள்ளது. பருவநிலை சார்ந்த பேரிடர்களால் மட்டும் ஏற்பட்ட இழப்பு 151 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

தேசிய பேரிடர்களால் அதிக இழப்புக்களை சந்தித்த டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் (945 பில்லியன் டாலர்), சீனா 2வது இடத்திலும் (492 பில்லியன் டாலர்), ஜப்பான் 3வது இடத்திலும் (376 பில்லியன் டாலர்) உள்ளன. ஐநா.,வின் தேசிய பேரிடர் அபாய குறைப்பு கழகம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் பருவநிலை சார்ந்த பேரிடர்களால் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். 4.4 பில்லியன் பேர் படுகாயம் அடைந்தும், வீடுகளை இழந்தும் உள்ளனர். இதில் பொருளாதாரம் இழப்பு மற்றும் உயிரிழப்புக்களை அதிகம் சந்தித்த நாடு இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் தேசிய பேரிடரால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். கோடிக்கணக்கான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X