பொது செய்தி

இந்தியா

இந்திய பங்குச்சந்தைகள், ரூபாய் மதிப்பில் கடும் சரிவு

Added : அக் 11, 2018 | கருத்துகள் (51)
Advertisement
இந்திய பங்குச்சந்தைகள்,  ரூபாய் மதிப்பு சரிவு, சென்செக்ஸ், சர்வதேச பங்குச்சந்தைகள்,  மும்பை பங்குச்சந்தை,  தேசிய பங்குச்சந்தை, நிப்டி, பங்குச்சந்தைகள் சரிவு, Indian stock markets, rupee depreciation, international stock markets, Sensex, Mumbai stock market, NSE, Nifty,national stock exchange

மும்பை : இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்.,11, காலை 9.15 மணி நிலவரம்)இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் ரூபாய் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட நெருக்கடியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 10,200 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. வர்த்தகம் துவங்கிய 5 நிமிடங்களில், ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்துள்ளதும் இந்திய பங்குச்சந்தைகளின் கடும் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிந்து 74.45 என்ற நிலையை எட்டி உள்ளது. இறக்குமதியாளர்கள் இடையே டாலரின் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை திடீரென அதிகமாக விற்றதால் உள்நாட்டு பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 74.21 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11-அக்-201820:13:58 IST Report Abuse
Nallavan Nallavan அட அறிவாளிகளே ....... பங்குச்சந்தை வீழ்வதும், வாழ்வதும் எந்த அரசிலும் நடக்கக் கூடியதே ......
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
11-அக்-201819:43:58 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி ?????பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும், 5 லட்சம் இந்திய, எம்.பி.ஏ., பட்டதாரிகள், 25 லட்சம் பயோ டெக்னிக்கல் நிபுணர்கள், இவர்களுக்கு உலக வளர்ச்சியுடன் தொடர்பிருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது, இந்த மாற்றம் இங்கு எதிரொலிக்குமா என்பதை, படித்தவர்கள் சிந்திப்பர்.அப்படி இருக்கும் போது, 'ஒரே வரி என்ற கருத்தில் உருவான, ஜி.எஸ்.டி., பொருளாதார புத்தாக்கத்திற்கு உதவுகிறது. இதை ஒரே நாளில், அரசு செய்ய முடியாத விஷயம். பொருளாதாரம் மாற்றுப் பாதையில் பயணிக்கும் காலம் தொடரும் பட்சத்தில், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஜப்பானை நாம் முந்திவிடலாம்' என, அரவிந்த் பனகாரியா போன்ற பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.?????
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
11-அக்-201819:39:27 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி இதுகூ என்ன reason தெரியூமா. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது போல, மாநில அரசுகளும் தங்கள் பங்கை நிறைவேற்றியாக வேண்டும். மாநில அரசுகள் இதன் மீதான, 'வாட்' வரியை குறைக்க நிதியமைச்சகமும் கேட்டுக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதை, பெட்ரோல், டீசல் விலை எதிரொலிப்பதில்லை என்பது ஓரளவு உண்மை. ஆனால், நேர்முக, மறைமுக மானியங்கள், முந்தைய காலத்தில் அதிகமாக அமல்படுத்தப்பட்டன. மத்திய அரசு, கச்சா எண்ணெய்க்காக அதிக, டாலர்களை தரவேண்டியதுடன், இலவச மானியங்களையும் ஏற்றதால், பணவீக்கம் அதிகரித்தது. புதிதாக வந்த, ஜி.எஸ்.டி., வரி அடிப்படையில், பெட்ரோல், டீசலைக் குறைக்க, மாநில அரசுகளும் முன்வரவில்லை. தமிழகத்தில், சென்ற மாதத்திற்கு முந்தைய மாதத்தில் மட்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், 500 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்திருக்கிறது என்பது, இதன் அடையாளம்.பா.ஜ., ஆளும் மாநிலங்கள் பலவும், லிட்டருக்கு, 5 ரூபாய் வரை விலை குறைப்பை, இப்போது அமல்படுத்தியுள்ளன. கச்சா எண்ணெயில் முக்கியமாக, 'பிரண்ட்' என்ற ரகம், அதிக உச்சத்தில் உள்ளது. இது, அதிக கந்தக கலப்பற்றது என்பதால், குறைகள் அதிகமற்றது. தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டு, பொதுமக்கள் அதிர்ந்து, அதிருப்தி தெரிவித்தாலும், கொள்கை முடிவு எடுக்க, மத்திய அரசு இத்தனை நாள் தாமதப்படுத்தி இருக்கிறது.அதற்கு காரணங்கள் உள்ளன. அபப்பிதா சொல்லோணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X