பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா ஊழல்: விழுப்புரம் எஸ்.பி.,க்கு ஆஜர்

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (4)
Share
Advertisement
குட்கா ஊழல், சிபிஐ, விழுப்புரம் எஸ்பி ஜெயகுமார், ஜார்ஜ், குட்கா முறைகேடு , எஸ்பி ஜெயகுமார் , முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், 
Gudka scam, CPI, Villupuram SP, George, Gudka abuse, SP jeyakumar, former commissioner George,

சென்னை: குட்கா முறைகேடு வழக்கின் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டதை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் முன் விழுப்புரம் எஸ்.பி., ஜெயகுமார் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்கா ஊழல் நடந்த காலத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றியவர் ஜெயக்குமார். இவர் தற்போது விழுப்புரம் மாவட்ட எஸ்பி.,யாக இருந்து வருகிறார். இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக விசாரணையின் போது முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், ஜெயக்குமார் தன்னிடம் தகவல் தரவில்லை என கூறி இருந்தார். ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி எஸ்.பி., ஜெயக்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனையடுத்து நேரில் ஆஜரான அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201816:57:41 IST Report Abuse
Endrum Indian வேடிக்கை வினோதம் என்னவோ பெரிய கண்டுபிடிப்பு மாதிரி, இதற்கு விசாரணை, விசாரணை, விசாரணை. அங்கேயே அது நின்று விடும் தண்டனை எல்லாம் கிடையாது????அரசியல்வாதி, அதிகாரி இவர்கள் தொடர்பு இல்லாமல், இவர்கள் துணை இல்லாமல் ஒருக்காலும் ஊழல் நடக்காது. எல்லோரும் கமிஷன் பேசிசில் வேலை செய்யும் கும்பல்கள். அரசியல்வாதி, அதிகாரிகளின் தலையாய கடமை என்ன?? ஜன சேவை. அப்படி இருக்கும்போது அவர்கள் தலையாய கடமை இப்பொழுது என்னவாயிற்று???ஊழல் என் உயிர் மூச்சு, ஊழலில்லாமல் நானில்லை, எனக்கொரு ஊழல் இருக்கின்றது, என்றும் அது என்னை காக்கின்றது,
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
11-அக்-201816:08:50 IST Report Abuse
kalyanasundaram why investigating authorities not initiating action against minister
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
11-அக்-201815:06:58 IST Report Abuse
sumutha - chennai ஒரேயொரு கேள்வி குட்கா என்பது இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் ஓன்று. எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதா? அதெப்பெடிடா உங்களுக்கு மட்டும் மூக்கில் வேர்த்து விடுகிறது? எதை தொட்டாலும் ஊழல்தானா? எதற்கெடுத்தாலும் லஞ்சம் தானா? எனக்கு ஒரு சந்தேகம். சரியா என சொல்லுங்கள். நம் தமிழ்நாட்டில் புகையிலை பயிரிட்டு அதை சுருட்டாகவும் பண்ணீர் புகையிலை என்றும் தாம்பூலத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். அதை பயன் படுத்திய அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ்ந்துள்ளனர். யாரும் இப்போது போல் புற்று நோய் வந்து அவதிப்பட்டு மடியவில்லை. இப்போது மட்டும் ஏன் இப்படி. மருத்துவர்களும் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களும் ஏன் நாமும் யோசிப்போம். வடநாட்டில் இருந்து வந்த புகையிலை விற்பனைக்கு வந்த பிறகுதான் இந்த புற்று நோய் தாக்கம் மிக அதிகமா உள்ளது. அந்த புகையிலையில் என்ன கலந்துள்ளது ஏன் நம் நாட்டில் பயிரிட்டு விற்பனையிலிருந்த புகையிலையால் ஏன் இந்த புற்று நோய் தாக்கம் அதிகம் இல்லை . யாராவது கவனித்தீர்களா யோசித்தீர்களா? நாட்டு மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆனால் குட்காவில் ஊழல் மட்டும் பலகோடி செய்ய வேண்டும். இது என் நாடு இவர்கள் என் நாட்டு மக்கள் என்ற எண்ணம் ஆட்சியில் மற்றும் அதிகாரத்தில் உள்ள ஒருவருக்குமா தோன்ற வில்லை. யாரேனும் இதற்கு பதில் சொல்லுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X