பொது செய்தி

இந்தியா

மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு

Added : அக் 11, 2018 | கருத்துகள் (211)
Advertisement
கேரளா சபரிமலை, மசூதி பெண்கள் அனுமதி, சுப்ரீம் கோர்ட் வழக்கு, சபரிமலை, சுப்ரீம் கோர்ட், முஸ்லிம் பெண்கள் மன்றம், வி.பி.சுஹாரா, முஸ்லிம் பெண்கள், 
Kerala Sabarimala, mosque womens entry, Supreme Court case, Sabarimalai, Supreme Court, Muslim womens forum, VP suhara, Muslim women,
கோழிக்கோடு: சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.


கடுமையான பாகுபாடு


கேரளாவில் செயல்பட்டு வரும் முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் இது குறித்து கூறியதாவது:

கேரளாவில் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம். நபிகள் நாயகத்தை பின்பற்றும் எந்த ஒரு முஸ்லிமும் பெண்களை ஓரம் கட்ட முடியாது. இப்பிரச்னையில், பிற மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டவர்களின் மத சுதந்திரத்தை காப்பாற்ற தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

தீண்டாமை கடைப்பிடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அந்த வகையில், சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு வரவேற்க தக்கது. கொடூர பழக்க வழக்கங்களான நரபலி, உடன்கட்டை ஏறுதல், தேவதாசி போன்றவற்றுக்கு தடை விதித்தது போல, சபரிமலை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (211)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Rafeeq - Manchester,யுனைடெட் கிங்டம்
17-அக்-201801:37:24 IST Report Abuse
Mohammed Rafeeq ஏற்கனவே சென்னையிலும் பெங்களூரிலும் பல பள்ளி வாசல் களில் பெண்கள் அனுமதிக்க படுகிறார்கள் , வசதி இருந்தால் பெண்கள் தொழ தடை இல்லை
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-அக்-201822:52:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சம்பிரதாயம், மதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து நடத்தும் பெண் அடிமை அசிங்கங்களை புறக்கணிப்போம்.. இந்த வழக்கை வரவேற்போம். வாடிகனிலும் ஆணாதிக்கத்தை அறவே ஒழிப்போம்..
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
13-அக்-201807:13:46 IST Report Abuse
Ray தென்னை மரத்திலே தேள் கொட்டினா பனைமரத்தில் நெறி கட்டுதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X