சிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

Updated : அக் 12, 2018 | Added : அக் 11, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 சிகாகோ 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சிகாகோ: 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது.

10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது.


அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)


அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் 1964ஆம் ஆண்டு புதுடில்லியில் தனிநாயக அடிகளின் முயற்சியால் நிறுவப்பட்டது. பிரான்சை சேர்ந்த பீலீயோசா, செக்கசுலோவிக்கியா சுலபில், ஆசர், இங்கிலாந்து பரோ, எமனோ, தமிழகத்தைச் சேர்ந்த தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர்.

இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம். "பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்." இதன் நோக்கம்


இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்


கோலாலம்பூரில், 1966ஆம் ஆண்டு முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடும், சென்னையில், 1968-ஆம் ஆண்டு இரண்டாம் மாநாடும், தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன.


10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு


முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத் துணைத் தலைவர் வி.சி.குழந்தைசாமியின் உந்துதலாலும் ஊக்கத்தினாலும் அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவையும், சிகாகோத் தமிழ்ச்சங்கமும் அடுத்த மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.

2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் பிரான்சிசு ச. முத்து, அடுத்த மாநாட்டை, முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் சோமா இளங்கோவன் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் மாரிமுத்தும், துணைத் தலைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். இப்போது 2019ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் சோமா இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராக இருக்கிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசாமி, சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் மணி குணசேகரன் பொறுப்பேற்றுள்ளனர். புலவர் பிரான்சிசு ச. முத்து ஆய்வுக்கு குழுவின் (Academic Committee) தலைவராகவும், தமிழ் ஆய்வாளர் பி மருதநாயகம் ஆய்வுக்குழுவின் இணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.


மைய ஆய்வுப் பொருளும் ஆராய்ச்சி தலைப்புகளும்


இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருளாக, "தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்." அமைந்துள்ளது

ஆராய்ச்சித் தலைப்புகளை பற்றியும், "ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்" (ABSTRACT), "ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையையும்" (RESEARCH PAPER) அனுப்பும் முறைகளையும் அனுப்பவேண்டிய தேதிகளையும் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:

www.iatrnew.org or
http://www.icsts10.org
email iatr2019@fetna.org.
https://fetna.org/wp-content/uploads/2018/09/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-32-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B.mp4?_=1

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
12-அக்-201811:04:53 IST Report Abuse
Jaya Ram இது தமிழர்களின் தளம் இங்கு ஜாதிக்கோ, மதத்திற்கோ இடமில்லை தமிழ் மொழிதான் இங்கு பிரதானம் எனவே தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுகிறவர்கள் மட்டும் கருத்துரைக்கலாம் அப்படியல்ல நாங்கள் எல்லாவற்றையும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து வெளியேறிவிடுங்கள் நிறைகள், குறைகள் ஆயிரம் காணலாம் ஆனால் இப்போதைய சொல்லநிலையில் தாய் தமிழ் நாட்டிலேயே தமிழை காப்பாற்றமுடியாமல் ஹிந்திக்கு அனுமதிகொடுக்கும் நிலையில் நாம் உள்ளோம் எனவே நமக்கு தேவை தமிழனை அனைவருடைய இல்லங்களுக்கு கொண்டுசெல்வதே நோக்கமாக இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
MANI DELHI - Delhi,இந்தியா
12-அக்-201815:42:51 IST Report Abuse
MANI DELHIமிக சரி. ஆனால் நீங்கள் சொல்வது நடக்கறதில்லயே.....
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
12-அக்-201809:41:25 IST Report Abuse
Appan தமிழ் மொழி பற்று இல்லாதவர்கள் எதற்கு தமிழ்லில் எழுத வேண்டும்.?. இங்கு பலர் இந்த நிகழ்வை சாடியுள்ளார்..பார்ப்பனர் வசை படும் தளம் என்று சிலர் எழுதி உள்ளார்..தமிழுக்கு சிறந்த வளற்சியை செய்தவர்கள் வ,உ.சாமிநாத அய்யர்..பாரதியார்... இவர்களுக்கு இணையாக யார் உள்ளார்கள்..?..வ.யூ. சாமிநாத அய்யருக்கு ஐ.ஏ.அஸ்.,அல்லது தமிழ் ஆராய்ச்சி என்று தேர்வு செய்யும் நிலை வந்த பொது அவர் தமிழை தேர்வு செய்தார்.. இவர்களை யார் தூற்றுவார்கள்..?.
Rate this:
Share this comment
MANI DELHI - Delhi,இந்தியா
12-அக்-201815:41:47 IST Report Abuse
MANI DELHIஉங்கள் கருத்து சரி தான். அங்கு வர பேச்சாளர்களெல்லாம் திக கோஷ்டி. அவர்களுக்கு சாமிநாத ஐயர், பாரதியார் எல்லாம் மறந்து வெகு நாளாகி விட்டது. இப்பவெல்லாம் போலி சமூக நீதி, பெரியாரிஸ்ம், கடவுள் மறுப்பு, ஆரியர் திராவிட வேறுபாடு இதை தான் தமிழ் வளர்ச்சி என்று சொல்கிறார்கள். எங்களை பொறுத்தவரை போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே என்பது தான் நிதர்சனம் ........
Rate this:
Share this comment
Cancel
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
12-அக்-201808:52:01 IST Report Abuse
raguraman venkat அமெரிக்காவில் வருடா வருடம் ஜூலை 4 விடுமுறையின் போது தமிழ் மாநாடு நடைபெறும். தமிழுக்கு தொடர்பே இல்லாத திராவிட மட்டைகளை அழைத்து விருந்தும், உபசரிப்பும் நடைபெறும். கிட்டத்தட்ட ஒரு திராவிடர் கழக மாநாடு மாதிரி இருக்கும். இந்த ஊருக்கு வந்த புதிதில் அப்படிப்பட்ட ஒரு தமிழ் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். மேடையில் பேசியவர் வடமொழியை எதிர்த்து அப்படி ஒரு வீராவேசம் - பேசியது முழுவதும் தவறான தகவல்கள், இதற்கிடையில் மற்றொரு விழா அமைப்பாளரை அவருடைய பெயரை ஜெயபாலன் என்பதிலிருந்து வெற்றிபாலன் என்று மாற்றிக்கொள்ளச்சொன்னார். ஏனென்றால் ஜெய என்பது வடமொழியாம். எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை - இந்த கூமுட்டைகளுக்கு பாலன் என்பதும் ஒரு வடமொழிப்பெயர் என்று தெரியவில்லை. எந்த ஒரு மொழியையோ, இனத்தையோ கண்மூடித்தனமாக எதிர்த்தால் இப்படித்தான் தப்பும் தவறுமாக உளறவேண்டி வரும். ஆனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு மறக்காமல் அஜய், விஜய் இதுபோன்ற பெயர்களை வைத்திருப்பார்கள். மூடர் கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X