பதிவு செய்த நாள் :
'கை' ஏந்தல்!
'காம்ரேட்' பாணியில் களமிறங்கும் காங்.,
'டோக்கன்' தலைவராக ராகுல் அவதாரம்

அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, கட்சியை பலப்படுத்தும் பணியில், காங்., தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் உண்டியல் வசூல் செய்யும் கம்யூனிஸ்டுகளை போல், காங்கிரசாரும் நிதி வசூலில் களம் இறக்கப்பட்டு உள்ளனர். 'பூத்' வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, வசூல் வேட்டை வேகமெடுத்துள்ளது.

கை ஏந்தல்,காம்ரேட்,பாணி,களமிறங்கும்,காங்.,டோக்கன், தலைவராக,ராகுல்,அவதாரம்


மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைவதால், அதற்கு முன், லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி யில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், பிரதான அரசியல் கட்சிகள், தற்போதே, தேர்தல் பிரசாரத்தை துவக்கிவிட்டன. மத்தியில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன், பா.ஜ., தலைமை தீவிரமாக பணியாற்றி வருகிறது.

சுற்றுப்பயணம் :


பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப் பயணம் செய்து, மாநில நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை, பொதுமக்களிடம் எடுத்துரைக்கும்படி, 'பூத்' கமிட்டி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.,வின் அதிரடி வியூகங்களால் மிரட்சி அடைந்துள்ள, காங்., தலைவர் ராகுல், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தேர்தல் திட்டமிடும் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின், கட்சியை

பலப்படுத்தவும், நிதிஆதாரத்தை பெருக்கவும், 'தேர்தல் நிதி வசூல்' திட்டத்தை அறிவித்து உள்ளார்.

இதன் மூலம், கட்சியின் நிதிப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது மட்டுமின்றி, பா.ஜ., அரசின் ஊழல்களை, மக்களிடம் எடுத்துக் கூறவும், இந்த திட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் படி, கட்சி நிர்வாகிகளுக்கு, காங்., தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, அடுத்த மாதம் நடக்கவுள்ள, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெறும் நோக்கில், காங்., தலைவர் ராகுல், தேர்தல் நிதி வசூல் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

அக்., 2 முதல், நவ., 14 வரை நடக்கும் இந்த வசூல் திட்டத்தின் மூலம், கட்சியின் நிதி பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும். இதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும், 'பூத்' வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒரு நிர்வாகியின் கீழ், 10 உறுப்பினர்கள் நிதி வசூல் பணியில் ஈடுபடுவர். இதற்காக, ஒவ்வொரு குடும்பத்திடமும், 50, 100, 500 மற்றும் 1,000 ரூபாய் என்ற அடிப்படையில் ரசீது கொடுத்து, பணம் வசூலிக்கப்படும்.

ஒவ்வொரு உறுப்பின ரும், 20 குடும்பங்களிடம் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருப்பர். அவர்களை, தினமும் சந்தித்து, 'ரபேல்' போர் விமான ஒப்பந்த முறைகேடு உள்ளிட்டவை குறித்து, எடுத்துரைப்பர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து :


'பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரஸ், பொதுமக்களிடம் நேரடி நிதி வசூல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது துரதிர்ஷ்டவசமானது' என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியதாவது: சுதந்திர இந்தியாவை, 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்த பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி, தற்போது, பொதுமக்கள் மத்தியில் நேரடி நிதி வசூலில் இறங்கியுள்ளது.

Advertisement

கம்யூனிஸ்டுகள் தான், உண்டியல் வசூலில் ஈடுபடுவது வழக்கம். தற்போது, நீண்ட பாரம்பரியம் உடைய, காங்., ரசீது புத்தகங்களுடன், தேர்தல் நிதிக்காக, மக்களை தேடி வருவது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொது செயலர்களின் பயணப் படி ரத்து:

லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களாக பதவி வகிக்கும், காங்., பொதுச் செயலர்களுக்கு, கட்சியின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்படும் பயணப் படியை நிறுத்த, காங்., மேலிடம் உத்தர விட்டுள்ளது. இது குறித்து, காங்., மேலிடம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: காங்., பொதுச் செயலர்கள், மாநில பொறுப்பாளர்கள், கட்சிப் பணிக்காக, அவர்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு, கட்சியின் சார்பில் பயணப் படி வழங்கப்படுகிறது. லோக்சபா, ராஜ்யசபா, எம்.பி.,யாக பதவி வகிக்கும், பொதுச் செயலர்கள், மாநில பொறுப்பாளர்களுக்கு, இனி இந்த படி வழங்கப்படாது. அவர்கள், பயணப் படி கோரி, கட்சியின் மேலிடத்திற்கு விண்ணப்பிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நிர்மலா பயணம்: ராகுல் குற்றச்சாட்டு:

மூன்று நாள் அரசு முறை பயணமாக, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன், பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். அந்நாட்டின் ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லேவை சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து, காங்., தலைவர் ராகுல், டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: 'ரபேல் ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தையும் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியதாக, பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறினார். இப்போது, ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை சேர்த்தால் தான், ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, டசால்ட் நிறுவனம் கட்டாயப்படுத்தப்பட்டதாக, பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எனவே, இதில் முறைகேடு நடந்துள்ளது தெளிவாகிறது. உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு, மத்திய அரசு, இனிமேல் தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். முறைகேடுகளை மூடி மறைக்கப்பதற்காகவும், பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவுமே, நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றுள்ளார். இவ்வாறு ராகுல் கூறினார். இதற்கிடையில், 'ரபேல் ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்க்க வேண்டும் என, யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நாங்களாகவே, ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தோம்' என, டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
12-அக்-201819:53:08 IST Report Abuse

krishnanகார்பொரேட் பிட்சை எடுக்கும் கட்சி பிஜேபி

Rate this:
sethu - Chennai,இந்தியா
13-அக்-201818:29:33 IST Report Abuse

sethuஉனக்கு பிட்சை எடுப்பதில் இடைஞ்சலாக பி ஜெ பி உள்ளதா நண்பா. ...

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
12-அக்-201818:43:10 IST Report Abuse

C.Elumalaiடோக்கன் தலைவர் என்றாலே அது தினகரன் தான்.அதில் யாரும் போட்டி போடமுடியாது. டிக்கெட் இல்லாமல் சென்னை வந்தவர், 20தலைமுறைக்கு, சொத்து வைத்துள்ளார். 60ஆண்டுகளாக ஆட்சிசெய்த காங் இடம் காசுயில்லையாம். இதைநம்பி மக்களும் உண்டியலில், காசு போடுவார்களா என்ன.

Rate this:
N Parthiban - Thanjavur,இந்தியா
12-அக்-201818:31:49 IST Report Abuse

N ParthibanNow it is understandable why opposition including congress didn't accept demonitisation. Either they lost big currency or they don't want to sp the reserve money for the election. Because they are not sure they will come to power to regain all their resources

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X