பதிவு செய்த நாள் :
பாலியல் புகார் எதிரொலி
அக்பர் பதவி பறிபோகிறதா?

புதுடில்லி : மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, எம்.ஜே.அக்பர் மீது, பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்கள் கூறி வருவதை அடுத்து, நாடு திரும்பியதும், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல்,புகார்,எதிரொலி,அக்பர்,பதவி,பறிபோகிறதா?


பா.ஜ.,வை சேர்ந்த, எம்.ஜே.அக்பர், 67, வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர், முழுநேர அரசியல்வாதி ஆவதற்கு முன், பல பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் முக்கியப் பதவிகள் வகித்துள்ளார். இந்நிலையில், அக்பர், பத்திரிகைகளில்

பணிபுரிந்த காலத்தில், தங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, பெண் பத்திரிகையாளர்கள் சிலர், சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.

பத்திரிகைகளில் உயர் பதவியில் இருந்தபோது, ஓட்டல்களில் நடக்கும் நேர்முக தேர்வு மற்றும் ஊழியர்கள் கூட்டம் ஆகியவற்றில், பெண்களிடம் அக்பர் எப்படி நடந்துகொள்வார் என்பதை, விபரமாக விவரித்து, எழுதியுள்ளனர். ஒரு பத்திரிகையின் ஆசிரியராக, அக்பர் பதவி வகித்தபோது, அலுவலக அறையில், தன்னிடம் பாலியல் சீண்டலில் அவர் ஈடுபட்டதை, ஒரு பெண் பத்திரிகையாளர் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் மீது எழுந்துள்ள பாலியல் புகார், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இதுவரை பதில் அளிக்கவில்லை. அக்பர், அமைச்சக பணி தொடர்பாக, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவுக்கு,

Advertisement

சுற்றுப் பயணம் சென்றுள்ளார். பாலியல் புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து, அவர், சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்து, நாடு திரும்புவார் என, கூறப்பட்டது.

ஆனால், அவர் குனியா தீவுகளுக்கு செல்ல இருப்பதால், இந்த வாரக் கடைசியில் தான், இந்தியா திரும்புவார் என, கூறப்படுகிறது. இந்தியா திரும்பியதும், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
12-அக்-201810:44:23 IST Report Abuse

IndhuindianThe charges leveled against him are serious moral turpitude. The moment the charges surfaced, never mind these are false, he should have stepped down and faced these charges squarely. if proved wrong as he would claim, he could sue these people but on the other hand if proved, he should hang his head in shame and go to Jail. Not one but dozens of his former colleagues have given graphic deion of his antics. PM should not seek his resignation but should recommend to the President to sack him. He should be recalled to the country on his cost (since he ceased to be a Minister the moment he is sacked). On the contrary he is globe trotting going from one country to other lecturing them (God know on what). Will not the audience whisper or wonder loudly that the speaker is a sexual predator and in worse language. What is the image of the Country if these people are allowed to represent the country. May be all politicians have common gene.

Rate this:
raguraman venkat - Madurai,இந்தியா
12-அக்-201809:03:40 IST Report Abuse

raguraman venkatஅவர் அமைச்சராவதற்கு முன்பு நடந்த விஷயங்களுக்கு அதுவும் விசாரணை எதுவும் இல்லாமல் குற்றச்சாட்டின் பெயரில் ராஜினாமா செய்யச்சொல்வது நியாயமல்ல. நாம் அனைவரும் மாணவர்களாக இருந்தபோது ஏதாவது தவறு செய்திருப்போம் (ஒன்னும் இல்ல - பிட் அடிச்சோ கோப்பி அடித்தோ பரீட்சை எழுதியிருக்கலாம், அல்லது ரோட்டில் நின்று கொண்டு போகிற பெண்களை கேலி செய்தோ, தவறான பார்வை பார்த்தோ இருக்கலாம். அதற்காக இப்போது பார்க்கும் வேலையை ராஜினாமா செய் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா? இனிமேல் விதிமுறைகளை கடுமையாக்கி இதுபோன்ற குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்கவோ, அல்லது புறவாசல் வழியாக அரசு பதவி ஏற்கவோ முடியாதபடி சட்டம் கொண்டுவரவேண்டும். ஆனால் உச்ச நீதி மன்றமே நழுவிட்டதே....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:46:32 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎம்மா இப்போதான் இதெல்லாம் ஞாபகம் வருதா... உங்கள் கணவர் கோபித்து கொள்ளமாட்டாரா...?

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X