பதிவு செய்த நாள் :
ஆந்திரா புயல், ஒடிசா புயல், தித்லி புயல், புயல் தாண்டவம், மழை , சூறாவளி, தேசிய பேரிடர் மீட்புப் படை, ஆந்திரா வெள்ளம், ஒடிசா வானிலை , ஆந்திரா வானிலை, ஒடிசா வெள்ளம், கனமழை , ஆந்திரா கனமழை, ஒடிசா கனமழை ,ஒடிசா தித்லி புயல், ஆந்திரா தித்லி புயல் , Andhra Pradesh Storm, Odisha Storm, titli cyclone,  titli Storm, Storm Thunder storms, Rain, Hurricane, National Disaster Rescue Force,
Andhra Pradeshflood, Orissa Weather, Andhra  Weather, Odisha Flood, Heavy Rain, Andhra Pradesh Heavyrain, Orissa Heavy Rain, Odisha titli Storm, Andhra titli Storm,

புவனேஸ்வர் : வங்கக் கடலில் உருவான, 'தித்லி' புயல், ஆந்திரா - ஒடிசா இடையே நேற்று, மணிக்கு, 150 - 164 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. இந்த புயல், இரண்டு மாநிலங்களிலும், கோர தாண்டவமாடியது. இதனால், தொலை தொடர்பு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களை, புயல் துவம்சம் செய்தது.

வங்கக் கடலில் உருவான, 'தித்லி' புயல், ஒடிசா மாநிலத்தின், கோபால்பூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின், பலசா இடையே, நேற்று காலை, 4:30 - 5:00 மணியளவில் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 150 - 164 கி.மீ., வேகத்தில், பலத்த சூறைக்காற்று வீசியது.

முடக்கம் :


புயலின் தாக்கத்தால், ஒடிசா மாநிலத்தின், கஞ்ஜம், கஜபதி ஆகிய மாவட்டங்களில், பலத்த மழை பெய்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில், மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சாலையோரங்களில் இருந்த மின் கம்பங்கள் சாய்ந்தன. கஞ்ஜம், கஜபதி, புரி, பலசோர் உட்பட எட்டு மாவட்டங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்றால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். சாலையோரங்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணி, சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றும் பணி, தீவிரமாக நடக்கிறது.

ஒடிசாவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்தான பகுதிகளில் இருந்து, மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து, மீட்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

எனினும், இந்த மாநிலத்தில், உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

பலத்த மழை காரணமாக, ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், தமிழகத்தின், சென்னை சென்ட்ரலில் இருந்து, ஒடிசா மாநிலம், புவனேஸ்வருக்கு, இன்று இரவு இயக்கப்பட வேண்டிய, புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.புவனேஸ்வரில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இயக்கப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டது.

உத்தரவு:


'தித்லி' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேவையான உதவிகளை செய்யும்படி,

அதிகாரிகளுக்கு, பிஜு ஜனதா தளத் தலைவரும், ஒடிசா மாநில முதல்வருமான, நவீன் பட்நாயக் உத்தரவிட்டு உள்ளார். ஆந்திர மாநிலத்தையும், 'தித்லி' புயல் விட்டு வைக்கவில்லை. இந்த மாநிலத்தின், விசாகப்பட்டினம், விஜய நகரம் உள்ளிட்ட இடங்களில், புயல் கரையைக் கடந்த போது, பலத்த மழை பெய்தது.

மின் துண்டிப்பு :


ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள, பலசா ரயில்வே ஸ்டேஷன், கடுமையாக சேதமடைந்தது.இந்த வழித்தடத்தில், ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது; மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.'தித்லி' புயலால், ஆந்திர மாநிலத்தில், எட்டு பேர் பலியானதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்திற்கு மழை வாய்ப்பு:

தமிழகத்தில், ஒரு வாரமாக மழை குறைந்து, வெயில் சுட்டெரித்தது. 'தித்லி' புயல் கரையைக் கடந்ததால், தமிழகத்தில், காற்றின் போக்கில், மீண்டும் மாற்றம் ஏற்பட துவங்கியுள்ளது.எனவே, 'அடுத்து வரும் இரண்டு நாட்களில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகும்' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:31:25 IST Report Abuse

Srinivasan Kannaiyaசமயத்தில் இயற்க்கைக்கு கருணை இல்லமால் போகிறது...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-அக்-201816:14:22 IST Report Abuse

இந்தியன் kumarதவறான கருத்து . எப்பொழுது எது எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் . இன்பமும் துன்பமும் கலந்து தான் வாழ்க்கை...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
12-அக்-201807:11:11 IST Report Abuse

தங்கை ராஜாதமிழகத்திற்கு வரவேண்டிய மழையெல்லாம் இப்படி மற்ற பகுதிகளுக்கு புயலாக மாறி போகிறது.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-அக்-201804:29:06 IST Report Abuse

Kasimani Baskaranபுயலால் சேதம் குறைவு என்பதில் மகிழ்ச்சியே...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X