முதல்வர் நிதிஷ் மீது, 'ஷூ' வீசியவன் கைது

Added : அக் 12, 2018
Share
Advertisement
பாட்னா:பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மீது, 'ஷூ' வீசிய நபரை, போலீசார் கைது செய்தனர்.பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநில தலைநகர், பாட்னாவில், சமீபத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின், இளைஞரணி அமைப்புடன், முதல்வர் நிதிஷ் குமார் கலந்துரையாடினார். அப்போது, அவுரங்கபாதைச் சேர்ந்த, சந்தன் குமார்,
 முதல்வர் நிதிஷ் மீது, 'ஷூ' வீசியவன் கைது

பாட்னா:பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மீது, 'ஷூ' வீசிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

பீஹார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநில தலைநகர், பாட்னாவில், சமீபத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின், இளைஞரணி அமைப்புடன், முதல்வர் நிதிஷ் குமார் கலந்துரையாடினார். அப்போது, அவுரங்கபாதைச் சேர்ந்த, சந்தன் குமார், முதல்வர் நிதிஷ் குமார் மீது, 'ஷூ'வை வீசினான்.

தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவனை கைது செய்தனர். விசாரணையில், 'நான் உயர் ஜாதி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், இட ஒதுக்கீடு காரணமாக, வேலை கிடைக்கவில்லை. இந்த கோபத்தில் தான், முதல்வர் மீது, ஷூவை எறிந்தேன்' என, போலீசாரிடம், சந்தன் குமார் தெரிவித்தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X