உருது ஆசிரியர் பணி உ.பி.,யில் திடீர் ரத்து| Dinamalar

உருது ஆசிரியர் பணி உ.பி.,யில் திடீர் ரத்து

Added : அக் 12, 2018
Share
லக்னோ:உத்தர பிரதேச மாநிலத்தில், உருது ஆசிரியர்களின் பணி நியமனத்தை, அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.உ.பி.,யில், கடந்த, 2016ல், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்த போது, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டது. அவற்றில், 4,000 பணியிடங்கள், உருது ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.இந்நிலையில், முதல்வர்

லக்னோ:உத்தர பிரதேச மாநிலத்தில், உருது ஆசிரியர்களின் பணி நியமனத்தை, அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

உ.பி.,யில், கடந்த, 2016ல், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்த போது, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டது. அவற்றில், 4,000 பணியிடங்கள், உருது ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்ற பின், உருது ஆசிரியர் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, இந்த பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.'ஆரம்ப பள்ளிகளில் போதுமான அளவில் உருது ஆசிரியர்கள் இருப்பதால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க தேவையில்லை' என, மாநில கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X