பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சசிதரூரின், 'ப்ளாப்ளாப்ளா'
வார்த்தை புரியாமல் அவதி

புதுடில்லி : ஐ.நா.,வில் பணியாற்றிய, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அது குறித்து விளக்குவதற்கு, அவர் பயன்படுத்தியுள்ள, மிக நீளமான ஆங்கில வார்த்தை, ஆர்வத்தை ஏற்படுத்துவதைவிட, குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது.

குழப்பம்,சசிதரூர்,ப்ளாப்ளாப்ளா,வார்த்தை,அவதி


முன்னாள் மத்திய அமைச்சரான, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், 62, கேரளாவைச் சேர்ந்தவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் படித்த அவர், அமெரிக்காவில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். திருவனந்தபுரம், எம்.பி.,யாக உள்ள அவர், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்; பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

தற்போது, பிரதமர் நரேந்திர மோடி குறித்து, 'முரண்பாடான பிரதமர்' என்ற தலைப்பில், 400 பக்க புத்தகம் எழுதி உள்ளார். இது தொடர்பாக, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், சசி தரூர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்காக, மிகவும் நீளமான, 29 எழுத்துகள் அடங்கிய ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினார்.

படிப்பதற்கும், உச்சரிப்பதற்கும் கடினமான அந்த வார்த்தைக்கு, 'ஒரு பொருள் தேவையில்லாதது என்பதை நிரூபிக்கும் பழக்கம்' என, அர்த்தம். பிரதமர் மோடி குறித்து, இதைத் தான் இந்த புத்தகத்தில் செய்துள்ளேன் என்பதற்காக, அந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

சசி தரூர் பயன்படுத்திய அந்த வார்த்தை குறித்து, டுவிட்டரில் பலரும் கிண்டல் அடித்துள்ளனர். 'இனி சசி தரூரின் புத்தகத்தை படிக்க மாட்டேன். ஏனென்றால், கூடவே, ஒரு அகராதி வைத்திருக்க வேண்டியுள்ளது' என, சிலர் டுவிட்டரில் குறிப்பிட்டனர். இந்த கருத்துகளுக்கு பதிலளித்து, நேற்று மற்றொரு செய்தியை, டுவிட்டரில் சசி தரூர் வெளியிட்டார்.

அதில், 'மிகவும் நீளமான வார்த்தையைப் பார்த்து பயன்படுவதை பார்த்து பயப்படுவது'

Advertisement

என்பதை குறிக்கும், 35 எழுத்துகள் உள்ள மிகவும் நீளமான வார்த்தையை, அவர் பயன்படுத்தினார்.

இது போல், பலமுறை, பொதுவாக பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகளை சசிதரூர் அதிகம் பயன்படுத்துவார். தற்போது, மிகவும் நீளமான வார்த்தைகளை பயன்படுத்தி, டுவிட்டரில் மக்களை அவர் குழப்பியுள்ளார்.

'மிகவும் எளிமையாகவும், சுருக்கமாகவும், சொல்ல வந்ததை சொல்வதற்காகத்தான், டுவிட்டர் போன்ற சமூக தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அதை, தன் ஆங்கில புலமையை காட்டுவதற்காக சசி தரூர் பயன்படுத்துகிறார்' என, சிலர் விமர்சித்து உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmanaban Parameswaran - madurai,இந்தியா
13-அக்-201810:04:12 IST Report Abuse

Padmanaban Parameswaranமிக பழைய பாகவதம் பகர்கிறது கலியுகத்தில் தலைவர்கள் அலங்காரமாக பேசுவார்கள் என்று

Rate this:

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) அவர் பதிவிட்ட இரு சொற்களையும் இங்கே பதிவிட்டு இருக்கலாம். Floccinaucinihilipilification என்ற இந்த வார்த்தைக்கு "மதிப்பே இல்லாத பொருளுக்கு மதிப்பிடுவது" என்று அர்த்தமாகும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-அக்-201819:15:59 IST Report Abuse

Pugazh Vசசிதரூர் பற்றி விமர்சனம் எழுதும் அளவுக்கு இங்கே யாருக்குமே தகுதி கிடையாது. ஆனால் கன்னாபின்னாவென்று அவமரியாதையாக அநாகரிகமாக எழுவது தானே பலரின் வழக்கம். சான்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. இங்கே வரும் கிறுக்கல்கள் பற்றி அவர் கவலைப்பட மாட்டார். எழுதிக் கொள்ளுங்கள். சிரிப்பு வருகிறது

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X