இறைச்சி கடைகளை மூட சிவசேனா மிரட்டல்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Share
Advertisement
குர்கான்:நவராத்திரியை முன்னிட்டு, ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள, 1,000 இறைச்சி கடைகளை, 10 நாட்களுக்கு மூடும்படி, சிவசேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மிரட்டல் விடுப்பதாக, புகார் எழுந்துள்ளது.மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரி விழாவின் போது, குர்கானில் உள்ள இறைச்சி கடைகளை திறக்க, ஹிந்து அமைப்புகள் அனுமதிப்பதில்லை' என, இறைச்சி கடை

குர்கான்:நவராத்திரியை முன்னிட்டு, ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள, 1,000 இறைச்சி கடைகளை, 10 நாட்களுக்கு மூடும்படி, சிவசேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மிரட்டல் விடுப்பதாக, புகார் எழுந்துள்ளது.

மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரி விழாவின் போது, குர்கானில் உள்ள இறைச்சி கடைகளை திறக்க, ஹிந்து அமைப்புகள் அனுமதிப்பதில்லை' என, இறைச்சி கடை உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.இது குறித்து, சிவசேனா அமைப்பின், குர்கான் மாவட்ட பொறுப்பாளர், சஞ்சய் தக்ரால், செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

குர்கானில், 1,000 இறைச்சி கடைகள் உள்ளன. நவராத்திரியின் போது, 10 நாட்களுக்கு அவற்றை மூடும்படி கோரிக்கை வைத்தோம்.இதை ஏற்று, 60 கடைகளை மூடினர். மீதியுள்ள, 940 கடைகள் மூடப்படவில்லை.எனவே, சிவசேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் தொண்டர்கள், பல பகுதிகளுக்கும் நேரில் சென்று, இறைச்சி கடைகளை மூடும்படி வலியுறுத்தி வருகிறோம்.

மறுப்பு தெரிவிப்பவர்களின் கடைகளை வலுக்கட்டாயமாக மூடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, இறைச்சி கடைகளை வலுக்கட்டாயமாக மூடிய ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நான்கு பேரை, போலீசார் கைதுசெய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-அக்-201807:22:53 IST Report Abuse
Loganathan Kuttuva மாட்டிறைச்சி வேண்டாம் என்று கூறியவர்கள் எந்த இறைச்சியும் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதனால் வாக்கு வங்கி வெகுவாக பாதிக்கும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-அக்-201802:09:47 IST Report Abuse
Mani . V அப்படியே பாஜக, ஆர்.எஸ்.எஸ்., காரர்களால் நடத்தப்படும் தோல் தொழிற்சாலைகளையும், இறைச்சி ஏற்றுமதி தொழிற்சாலைகளையும் மூடச் சொன்னால் நன்றாக இருக்கும். (வெளியில் இருக்கும் இறைச்சிக் கடைகளால் இவர்களின் தொழில் பாதிப்படைகிறது என்பதற்காகத்தான் வெளியில் இருக்கும் இறைச்சிக் கடைகளை மூடச் சொல்லி மிரட்டி இருப்பார்களோ?)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X