செய்தி சில வரிகளில்...

Added : அக் 12, 2018
Advertisement


ரஷ்ய விண்கலம்அவசர தரையிறக்கம்



மாஸ்கோ: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு, இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்துச் சென்ற, ரஷ்யாவின், சோயுஸ் விண்கலம், மத்திய கஜகஸ்தானில், சமீபத்தில், அவசரமாக தரையிறக்கப்பட்டது. மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்; இரண்டு விண்வெளி வீரர்களும், பாதுகாப்பாக உள்ளனர். 'பூஸ்டர்' பிரச்னை காரணமாக, விண்கலம் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


போரில் பாதிக்கப்பட்டமக்களுக்கு இழப்பீடு



கொழும்பு: அண்டை நாடான, இலங்கையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் சண்டை நடந்தது. இறுதிக்கட்ட போரில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்கும் மசோதா, அந்நாட்டு பார்லிமென்டில், நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த போரில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பர் என, கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.


சீன உளவுத் துறை அதிகாரிஅமெரிக்காவுக்கு கடத்தல்



வாஷிங்டன்: அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்தவர், யன்ஜுன் சூ; உளவுத் துறை அதிகாரி. அமெரிக்க விமான நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை உளவு பார்த்ததாக, இவர் மீது, புகார் உள்ளது. இது தொடர்பாக, அவர் கைது செய்யப்பட்டார். சமீபத்தில், யன்ஜுன் சூ, சீனாவில் இருந்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். சீன அதிகாரி ஒருவர், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது, இதுவே முதன்முறை.


இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்



ஜகர்த்தா: சமீபத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த, இந்தோனேஷியாவில், நேற்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாலி மற்றும் ஜாவா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில், 6.0 ஆக பதிவானது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, மூன்று பேர் பலியாகினர்.


மலேஷியாவில் மரண தண்டனை ரத்து



கோலாலம்பூர்: மலேஷியாவில், கொலை, ஆள் கடத்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு, அதிகபட்சமாக, மரண தண்டனை விதிக்கப் படுகிறது. இந்நிலையில், மரண தண்டனை வழங்குவதை ரத்து செய்வதற்கு, அந்நாட்டு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X