இந்தியா

இல்லை:புதுச்சேரியில் மசாஜ் சென்டர் அமைக்க அனுமதி:நகராட்சி அதிகாரிகள் விளக்கம்

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018
Advertisement
இல்லை:புதுச்சேரியில் மசாஜ் சென்டர் அமைக்க அனுமதி:நகராட்சி அதிகாரிகள் விளக்கம்

புதுச்சேரி:புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களை நடத்த அனுமதி வழங்கவில்லை என, மறுத்துள்ள நகராட்சி அதிகாரிகள், அவற்றை அதிரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் விபசாரம் அதிகளவில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து சீனியர் எஸ்.பி., அபூர்வா குப்தா உத்தரவின் பேரில், சிறப்பு அதிரடிப்படையினர் சில தினங்களுக்கு முன்பு, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள், சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய சோதனையில்,8 அழகிகள் மீட்கப்பட்டனர். விபசார தொழிலை நடத்திய புரோக்கர்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, புதுச்சேரியில் மசாஜ் சென்டர்களுக்கு நகராட்சி அனுமதி வழங்கி இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது, அதை மறுத்தனர். அழகு நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கு மசாஜ் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X