திருச்சிற்றம்பலம் கூட்ரோடு:வானுார் தொகுதி பா.ஜ., வாக்குசாவடி முகவர்கள் கூட்டம், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடைபெற்றது.வானுார் ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் கோதண்டபாணி, மாநில தமிழ்வளர்ச்சி செயலாளர் செல்வகணேசன், கண்டமங்கலம் ஒன்றிய தலைவர் முருகன், கோட்டக்குப்பம் நகர தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். நெசவாளரணி பிரிவு தலைவர் பாலமுருகன், கோட்ட இணை பொறுப்பாளர் அருள் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.இதில், வானுார் பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சும் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். கோட்டக்குப்பம் பேரூராட்சியில் நடுக்குப்பம் சுடுகாட்டில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE