போஃபர்ஸ் பீரங்கி ஊழல்: இன்று விசாரணைக்கு வருமா ?

Added : அக் 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
போஃபர்ஸ் பீரங்கி ஊழல், இந்திய ராணுவம், பீரங்கி ஒப்பந்தம், அஜய் அகர்வால்,  உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் ஊழல், பீரங்கி ஊழல்,சுப்ரீம் கோர்ட் , 
Bofors Cannon Scam, Indian Army, Cannibals Agreement, Ajay Agarwal, Supreme Court, Congress scam, artillery scam, 
Artillery deal, Cannon Scam,

புதுடில்லி: கடந்த 1986-ஆம் ஆண்டில் மத்தியில் காங். ஆட்சியின் போது சுவீடனைச் சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு ரூ. 1,437 கோடியில் பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ரூ. 64 கோடி வரை லஞ்சம் கைமாறிய விவகாரத்தை 1990-ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் 2005-ம் டில்லி உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த பிப்ரவரியில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அப்போது அஜய் அகர்வால் என்பவர் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள கோரியிருந்தார்.இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் செய்திகள் வெளியாயின. ஆனால் விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. .

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201808:26:48 IST Report Abuse
Srinivasan Kannaiya இதை இன்னுமா நினைவில் வைத்து இருக்கிறீர்கள்... எப்பிடியும் இந்த சினிமா இன்னும் நூறு ஆண்டுகள் ஓடும் இல்லையா...
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
12-அக்-201807:38:53 IST Report Abuse
தங்கை ராஜா உண்மையான ரபேல் ஊழல் விவகாரத்தை திசை திருப்ப எப்போதோ செத்துப்போன போபர்ஸ் பூச்சாணடிக்கு புத்துயிர் கொடுக்க பிரயத்தனம் செய்வது புரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
12-அக்-201807:22:18 IST Report Abuse
R KUMAR அவசரமே இல்லை. மேலும் சில காலம் எடுத்துக்கொண்டு வழக்கை விசாரித்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள், இறந்து விடக்கூடிய நிலை வரும். அப்போது எளிதாக வழக்கை முடித்துவிடலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X