தமிழ்நாடு

கோவை நகரில் 57 ஆயிரம் எல்.இ.டி.,விளக்குகள் புதிய வெளிச்சம்!'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாற்றுவதற்கு முடிவு!

Added : அக் 12, 2018
Advertisement
 கோவை நகரில் 57 ஆயிரம் எல்.இ.டி.,விளக்குகள் புதிய வெளிச்சம்!'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மாற்றுவதற்கு முடிவு!

கோவை நகரில், தற்போதுள்ள தெரு விளக்குகளுக்குப் பதிலாக, 57 ஆயிரம் எல்.இ.டி., விளக்குகளைப் பொருத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 70/250 வாட்ஸ் வரையிலான சோடியம் ஆவி விளக்குகள், 40 வாட்ஸ் சி.எப்.எல்., மற்றும் டி 5 என 78 ஆயிரத்துக்கும் அதிகமான தெரு விளக்குகள் உள்ளன.
இவற்றை பராமரிக்க ஆண்டுக்கு 6 கோடி ரூபாயும், மின் கட்டணமாக 19 கோடி ரூபாயும் செலவாகிறது. பராமரிப்பு மற்றும் மின் கட்டணத்தை குறைப்பதோடு, சேமிக்கும் முயற்சிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
விரிவாக்கப் பகுதிகளில் உள்ள 40 வார்டுகளில், தெரு விளக்குகளை எல்.இ.டி.,யாக மாற்றியதில், 44.20 சதவீதம் அளவுக்கு, மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது.எனவே, அடுத்தகட்டமாக, 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட நிதியில், பழைய மாநகராட்சிப்பகுதியான 60 வார்டுகள் மற்றும் விரிவாக்கப்பகுதிகளில் விடுபட்ட பகுதிகளில், தெரு விளக்குகளை எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
56,984 எல்.இ.டி., விளக்குகள்!
கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் விரிவாக்கப்பகுதிகளில், 13 ஆயிரத்து 629, மேற்கு மற்றும் தெற்கு மண்டல விரிவாக்கப்பகுதிகளில் 9,390, இதே மண்டலங்களில் உட்பகுதிகளில் 6, 479, மத்திய மண்டலத்தில் 9,632, கிழக்கு மண்டலத்தில் 8,553 மற்றும் வடக்கு மண்டலத்தில் 9,301 என மொத்தம் 56 ஆயிரத்து 984 எல்.இ.டி., விளக்குகளைப் பொருத்த, 74 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில், மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
எல்.இ.டி.,விளக்குகள் பொருத்தப்பட்டால், 47.81 சதவீதம் வரை, மின்சாரம் சேமிக்கப்படும் என்று, மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இந்த மதிப்பீடு, 'ஸ்மார்ட் சிட்டி' நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்புதல் கிடைத்ததும், 'டெண்டர்' விடப்பட்டு, விளக்குகள் மாற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்; இதனால், பாதி இருளில் மூழ்கியுள்ள கோவை நகரம், பளிச்சிடுமென்று எதிர்பார்க்கலாம்.-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X