சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏர் இந்தியா விமானம் சுற்றுசுவர் மீது மோதல்: 130 பயணிகள் தப்பினர்

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018 | கருத்துகள் (29)
Advertisement
Air traffic Control ,Air India Flight, Flight technical problem, ஏர் இந்தியா விமானம், திருச்சி-துபாய் விமானம்,  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஏடிசி டவர், போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம், விமான தொழில்நுட்ப கோளாறு, 
 Air India, Trichy-Dubai Flight, Minister vellamandi Natarajan, ATC Tower,  Airport Technical Disaster,Flight technical disorder,

திருச்சி: திருச்சியில் இருந்து துபாயிக்கு புறப்பட்ட விமானம், சுற்றுச்சுவர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மோதல்


திருச்சியில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தில் இருந்த ஏடிசி டவர் (போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனை தொடர்ந்து விமானம் மும்பைக்கு சென்றது.


விபத்து தவிர்ப்பு

4 மணி நேரத்திற்கு பின் மும்பை யில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டாலும் 130 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
சம்பவம், நடந்த இடத்தில் தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார்.


சஸ்பெண்ட்

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கை: விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது முடியும் வரை விமானி மற்றும் துணை விமானி சஸ்பெணட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து டிஜிசிஏவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். அவர்களுக்கு, அங்கிருந்து துபாய் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாகவும், அதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.


விசாரணை

சுற்றுச்சுவர் மீது விமானம் மோதிய இடத்தை, திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன், திருச்சி எம்.பி., குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், திருச்சியில் விபத்து அதிகாலை 1.19 மணிக்கு நடந்தது. பயணிகள் பாதுகாப்பு கருதி, விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. அவர்கள் மாற்று விமானம் மூலம் துபாய் அனுப்பி வைக்கப்படுவார்கள். சம்பவம் நடந்த பின், உடனடியாக விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது.இயக்குவதில் பிரச்னை ஏதும் இல்லை என தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால், மற்ற விமான சேவைகளுக்கு பாதிப்பு இல்லை. திருச்சியில் நடந்த சம்பவம் குறித்து, டிஜிசிஏவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகே யார் மீது தவறு என்பது தெரிய வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
12-அக்-201820:25:45 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இடித்த அந்த வினாடி விமானம் குலுங்கியிருக்கும். பிரெஸ்டிஜ் பார்க்காமல் விமானி விமானத்தை திருச்சியிலேயே இறக்கியிருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kannan Chandran - Manama,பஹ்ரைன்
12-அக்-201814:28:26 IST Report Abuse
Kannan Chandran இடித்தது தவறு, ஆனால் தாமதமாக இறக்கியது சரியே, எரிபொருள் குறைந்த பின்னரே பாதுகாப்பாக இறக்கமுடியும்..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-அக்-201813:34:19 IST Report Abuse
Nallavan Nallavan நான் ஒரு முறை கூட இண்டிகோ தவிர வேறு நிறுவன விமானங்களில் பயணித்ததில்லை ..... இண்டிகோவிலும் வருடம் ஒரு முறை மட்டுமே ....(கொல்கத்தாவிலிருந்து சென்னை வரை, பிறகு ரிட்டர்ன்) .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X