பொது செய்தி

தமிழ்நாடு

நிர்மலா தேவி விவகாரம்: கவர்னர் மாளிகை விளக்கம்

Added : அக் 12, 2018 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை: அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியுடன் கவர்னர் மற்றும் ராஜ்பவனை தொடர்புபடுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய் என கவர்னர் மாளிகை கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை: போலீசார் முன்பு நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் மட்டும் தான் உண்மையை வெளிப்படும். கடந்த ஓராண்டில், கவர்னர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்தது கிடையாது. கவர்னர், செயலர், அதிகாரிகளை சந்தித்தது கிடையாது.
கவர்னர் மாளிகையில் பணியாற்றி வரும் யாருடனும் நிர்மலா தேவிக்கு தொடர்பு இல்லை. பட்டமளிப்பு விழாவிற்காக காமராஜர் பல்கலை சென்ற கவர்னர், பல்கலை விடுதியில் தங்கவில்லை. பல்கலைக்கு, கவர்னரின் செயலாளர் உடன் செல்லவில்லை. நேரடி, மறைமுகமாக, கவர்னருக்கு வரும் அச்சுறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-அக்-201818:28:43 IST Report Abuse
Bhaskaran மஞ்சள் பத்திரிகைகளையும் நம்பும் ஒரு பெருங்கூட்டம் உள்ளவரை தமிழ் நாட்டில் ஏகபத்னிவிரதனான ராமனையும் ஸ்த்ரீ லோலனாகவே சித்தரிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
12-அக்-201817:21:46 IST Report Abuse
ganapati sb ஆளுநர் பன்வாரிலால் தானே ஒரு பத்திரிகையாளர் நேர்மையான அவரின் நடவடிக்கையால் பல பல்கலைகழகங்களில் நடந்துவந்த முறைகேடுகள் குறைந்து ஊழல்வாதிகள் விலகி நேர்மையாளர்கள் துணை வேந்தர் பதவிக்கு வந்துள்ளனர் எப்போதும் தனிமனிதர்களை அவதூறுகள் செய்தெ மஞ்சள் பத்திற்கிகை நடத்தும் கோபாலை கொண்டு அவர் மீது களங்கம் கற்பிக்க ஊழல்வாதிகள் முனைகின்றனர் ஆடை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்தது போல நேர்மையான ஆளுநர் மாளிகை ஆடம்பர செலவுகளை குறைத்த எளிமையான ஆளுநர் மேல் அவதூறு பரப்பிய கோபால் மன்னிப்பு கேட்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
12-அக்-201816:34:54 IST Report Abuse
மாயவரத்தான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழன்,தமிழ்நாடு என்று சொன்னாலே இந்தியாவெங்கும் ஒரு மதிப்பு இருந்தது,கற்றவர்கள் இருக்கும் மாநிலம் என்று.என்று இந்த திராவிட இயக்கங்கள் தலையெடுக்க ஆரம்பித்தனவோ அன்றே முடிந்தது.இது கருணாநிதி ஆரம்பித்து வைத்தது. அவர் சட்டசபையில் இரட்டை அர்த்தத்தில் பேசியது, ஜெயலலிதா கவர்னர் சென்னாரெட்டி மீது கூறிய பாலியல் புகார் என, இவை திராவிட இயக்கங்களின் கேவலமான மனநிலையையே இது காட்டுகிறது. எந்த ஒரு மனிதனையும் கேவலப்படுத்த வேண்டும் என்றால் அவன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினால் போதும். சமுதாயம் எளிதாக நம்பும்.குறைந்தபட்சம் "இருக்குமோ " என சந்தேகப்படும். அப்படி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்ததுதான் இது. கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும்,இப்படி கேவலமான பொய் குற்றச்சாட்டுக்களை கொண்டு அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X