Navjot Singh Sidhu compares Pakistan with South India, says 'Everything in Pakistan is amazing' | தமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து | Dinamalar

தமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து

Updated : அக் 14, 2018 | Added : அக் 13, 2018 | கருத்துகள் (166)
Advertisement
சித்து சர்ச்சை , சித்து, பஞ்சாப், காங்கிரஸ், பாகிஸ்தான், தென்மாநிலங்கள்,பாகிஸ்தான் கலாசாரம்,  முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து , பஞ்சாப் அமைச்சர் சித்து, பஞ்சாப் கலாசாரம் சுற்றுலாத்துறை அமைச்சர் சித்து,  
Sidhu controversy, Sidhu, Punjab, Congress, Pakistan, Southern States, Pakistani culture,
Former cricketer Sidhu, Punjab Minister Sidhu, Punjab Culture and Tourism Minister Sidhu,

மும்பை: நான் தமிழகம் சென்றால், அந்த மாநில மொழி எனக்கு தெரியாது. வணக்கம் உள்ளிட்ட ஒரிரு வார்த்தைகள் மட்டுமே தெரியும். அந்த மாநில உணவும் பிடிக்காது. தென் மாநிலங்களை விட பாகிஸ்தான் கலாசாரம் நன்றாக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அமைச்சருமான சித்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


சர்ச்சை


சித்து, பஞ்சாப் மாநில கலாசாரம், சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவிற்கு சென்ற அவர், அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட சித்துவிடம், நமது பஞ்சாப் மாநிலத்திற்கும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபிற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சித்து அளித்த பதில், நான் தமிழகம் சென்றால், அந்த மாநில மொழி எனக்கு தெரியாது. வணக்கம் உள்ளிட்ட ஒரிரு வார்த்தைகள் மட்டுமே தெரியும். அந்த மாநில உணவும் பிடிக்காது. இட்லி சாப்பிட்டிருந்தாலும், அதனை நீண்ட நாட்கள் சாப்பிட முடியாது. அந்த கலாசாரம் முற்றிலும் வேறு. ஆனால், பாகிஸ்தான் சென்றால், மொழி வித்தியாசம் இருக்காது. அங்கு அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பா.ஜ., அகாலி தள கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (166)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
20-அக்-201801:31:35 IST Report Abuse
sankaranarayanan இப்படிப்பேசும் சித்துவை காங்கிரசிலிருந்து பப்பு கழட்டிவிட்டால் தான் கட்சிக்கு மோக்ஷம் - இல்லயேல் கட்சி நரகத்திற்கு தள்ளப்படும் - சித்துவே இனி உனக்கு தமிழ்நாட்டில் வரவேற்போர் யாருமில்லை. உன்னை யாரும் கூப்பிடமாட்டார்கள். வந்தாலும் மானங்கெட்ட உனக்கு இட்லி சாம்பார் இனி கிடையாது. தமிழன் வடக்கே வந்து எல்லா மொழிகளையும் கற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துகிறான். உனக்கு வலிக்கிறது. என்னடா நீ எல்லாம் பாரதத்தாய்க்கு ஒரு பெரிய சுமைதான் . காங்கிரசுக்கும் ஒரு அவக்கேடுதான்
Rate this:
Share this comment
Cancel
Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா
18-அக்-201809:24:27 IST Report Abuse
Ubaidullah Razzaq ஒரு வேளை காங்கிரசை தோற்கடிப்பதற்கு பிஜேபி இதை அவர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17-அக்-201801:42:55 IST Report Abuse
Matt P அவருக்கு பிடிக்காததை அவர் சொல்கிறார் ..அதில் என்ன தவறு?..இட்டலி பிடிக்கும் என்றும் சொல்கிறார் .பிரபலமாகி ஓன்று சொன்னால் பெரிதாக எடுத்து கொள்கிறோம் .. வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் , இங்கு பேசுகிற மொழியும் பிடிப்பதில்லை . இங்கு உணவும் பிடிப்பதில்லை ..பணம் மட்டும் பிடிக்கிறது என்று ஆகிவிடுகிறது பலருக்கு . இவர் வெளிநாட்டு என்றால் பாகிஸ்தான் மட்டும் தான் சென்று வாழமுடியும் ...வேறுநாட்டில் வாழ முடியுமா என்பது சந்தேகமே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X