பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கெடுபிடி!
நீதிபதிகள் விடுப்பு எடுக்க கடும் நிபந்தனை
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அதிரடி

புதுடில்லி: நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக, வேலை நாட்களில், நீதிபதிகள் விடுப்பு எடுக்க கடும் நிபந்தனை விதித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி, நிபந்தனை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்த, ரஞ்சன் கோகோய், சமீபத்தில், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், அடுத்த, 13 மாதங்களுக்கு இந்தபதவியில் நீடிப்பார். வழக்கறிஞராக பணியாற்றிய காலம் முதலே, நீதித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றிய கோகோய், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலங்களில், அவர் விசாரித்த வழக்கின் தீர்ப்புகள்,

முத்திரை பதிக்கும் வகையில் அமைந்தன.வழக்குகள் தேக்கம் அடைவதை விரும்பாத இவர், மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின் தாமதத்தால், அப்பாவிகளுக்கு தாமதமாக நீதி கிடைப்பதை, கடுமையாக எதிர்க்கும் எண்ணம் உடையவர். இது குறித்து, பல்வேறு வழக்கு விசாரணைகளின் போது கருத்து தெரிவித்துஉள்ளார். தற்போதைய நிலையில், நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள், உச்ச, உயர் நீதிமன்றங்களில், மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, நீதித்துறை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றவுடனேயே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மற்றும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கலந்துரையாடிய, ரஞ்சன் கோகோய், நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கினார். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவர்களின் பணி நடைமுறைகளில் பல்வேறு நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, நீதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:வீடியோ கான்பரன்ஸ் முறையில், நீதிபதிகளிடம் பேசிய தலைமை நீதிபதி, அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற வேலை நாட்களில் விடுப்பு எடுக்க, கடும் நிபந்தனைகள் விதித்துள்ளார். மிக முக்கிய காரணங்கள்தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும், நீதிபதிகள் விடுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு உள்ளார்.நீதிபதிகள், ஓராண்டில் தங்களுக்கு கிடைக்கும் விடுமுறையை, தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தும் படி கூறியுள்ளார். பண்டிகை காலங்கள் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போன்ற சூழ்நிலையில், தங்களுக்கு மேல் உள்ள நீதிபதிகளிடம் முன் கூட்டியே அனுமதி பெற்று, விடுப்பு எடுக்கும் படி கூறியுள்ளார்.நிலுவை வழக்குகளை தேங்க விடாமல் தடுக்க, ஒவ்வொரு நாளும் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அதன் நிலை உள்ளிட்டவை குறித்து, உச்ச நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.இதுவரை, வழக்குவிசாரணையின் நிலை குறித்த அறிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை, தினசரி அடிப்படையில் மாற்ற, தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அனைத்து நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள், வேலை நாட்களில், பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளில் பங்கேற்க தடை விதித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் அல்லது தொடர் விசாரணையில் உள்ள

Advertisement

மேல்முறையீட்டு வழக்குகளை முதலில் பட்டியலிட்டு, அந்த வழக்குகளை முதலில் விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம், நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும், மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள கோகோய், நீதிபதிகள் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.இவ்வாறு நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
3.3 கோடி வழக்குகள் தேக்கம் : நாட்டின், அனைத்து நீதிமன்றங்களிலும், 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, தேசிய நீதித்துறை புள்ளி விபரங்கள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள, விசாரணை நீதிமன்றங்களில், 2.84 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றங்களில், 43 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில், 57 ஆயிரத்து, 987 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.நாட்டிலேயே மிக அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில், 61.58 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில், 33.22 லட்சம்; மேற்கு வங்கத்தில், 17.59 லட்சம்; பீஹார், 16.58 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஒட்டு மொத்தமாக, நாடு முழுவதும், 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
14-அக்-201816:49:42 IST Report Abuse

siriyaarBut midnight cases very important your honor many suitcases can be exchanged against verdict.

Rate this:
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
14-அக்-201811:22:24 IST Report Abuse

Chanemougam Ramachandiraneநல்ல விசயம் தான் முதலில் மாநிலத்தின் தலைமை நீதிபதிக்க்கு அறிவிப்பு ஒன்னு வெளியிடனும் என்னவென்றால் சிவில் எது கிரிமினல் எது என்று வரையறுத்து அதற்கேற்றார்போல் வழக்கை நடத்தணும்

Rate this:
tamil - coonoor,இந்தியா
14-அக்-201809:20:35 IST Report Abuse

tamilஅவர்களுக்கு என்று உள்ள நேரத்தில் சரியாக, கவனத்துடன் வேலை செய்தாலே போதும் ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X