அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழனிசாமி, திமுக, மனு

முதல்வர் பழனிசாமி மீதான வழக்கு விவகாரத்தில், தி.மு.க., விடாப்பிடியாக உள்ளது.
முதல்வர் பழனிசாமி வசம், நெடுஞ்சாலை துறை உள்ளது. ஏழு ஆண்டுகளாக, இத்துறையை கவனித்து வருகிறார். இத்துறை சார்பில், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஆரம்ப கட்ட திட்ட மதிப்பீடு, 713.34 கோடி ரூபாய். பின், திட்ட மதிப்பீடு, 1,515 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.இப்பணிக்கான ஒப்பந்தம், 'ராமலிங்கம் அண்டு கோ' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், முதல்வரின் உறவினர். அதேபோல, திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழி சாலை திட்டம், 'வெங்கடாசலபதி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதன் உரிமையாளர், முதல்வரின் சம்பந்தி. இவ்வாறு, 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கியதில், முதல்வர் அதிகார துஷ்பிரயேகாம்

செய்துள்ளார் என, புகார் எழுந்தது.
இது குறித்து, ஜூன், 13ல், லஞ்ச ஒழிப்பு துறையிடம், தி.மு.க., சார்பில், புகார் அளிக்கப்பட்டது. புகாரை பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி சார்பில், வழக்கறிஞர் கிரிராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். விசாரணையின் போது, 'முதல்வருக்கு எதிரான புகாரில், முகாந்திரம் இல்லை' என, லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்தது. ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, 'லஞ்ச ஒழிப்புத்

துறை, முதல்வர் கட்டுப்பாட்டில் வருவதால், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, வாதாடினார். அதை ஏற்று, சி.பி.ஐ., விசாரணைக்கு, நீதிபதி உத்தரவிட்டார். இது, முதல்வருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது குறித்து, முதல்வர் வீட்டில், சட்ட ஆலோசனை நடந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க., அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், நிருபர்களிடம் கூறுகையில், 'உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்படும்'

என்றார். எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது முதல்வர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்வது உறுதியாகி உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் தரப்பில், சி.பி.ஐ., விசாரணைக்கு, உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்று விடக்கூடாது என்பதற்காக, நேற்று அவசரமாக, தி.மு.க., காய்களை நகர்த்தியது. முதல்வர் தரப்பு, உச்ச நீதிமன்றம் செல்வதற்கு முன், தி.மு.க., தரப்பில், கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அந்த மனுவில், 'முதல்வர் மீதான நெடுஞ்சாலை துறை ஊழல் வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு, மேல்முறையீடு செய்யப்பட்டால், எங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்' என, தி.மு.க., தரப்பில் கோரப்பட்டு உள்ளது. தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தரப்பில், இவ்விவகாரத்தில், விடாப்பிடியாக இருந்து, முதல்வர் பழனிசாமிக்கு, சட்டரீதியாக நெருக்கடி கொடுக்கப்படுவதால், ஆளும் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201821:20:38 IST Report Abuse

Pugazh Vநெற்றி யடி கேள்வி பை கணபதி. பிரமாதம். பாராட்டுக்கள். எந்த கட்சி யும் வாயே திறக்காமல் மூடிக்கொண்டு முடங்கி கிடக்கும். திமுக பொறுப்பான சரியான எதிர்க்கட்சி யாக தைரியமாக கேள்விகள் கேட்டு வழக்கும் போட்டால், உடனே அதிமுக விற்கு குடை கேடயம் வெண்சாமரம் பிடித்துக்கொண்டு திமுக வை பார்த்து நீ பேசாதே உனக்கு உரிமை இல்லை என்று எழுதுவார்கள். அடுத்த தேர்தலில் கூட்டணி வேண்டுமே. இதல்லவா பீஜேபீ யின் கேவலமக ஓட்டுவங்கி அரசியல்?? இதில் ஊழலை ஏற்காத கட்சி யாம். வெட்கமாக இல்லை? 9 ஆண்டு களாக ஆட்சி யில் இல்லாத திமுக மீது உண்மைக்கு புறம்பான பொய் குற்றச்சாட்டு களை இங்கே எழுதுவார்கள். யாராலும் வழக்கு போட முடியாது.. ஆதாரங்கள் தர முடியாது.. ஆனால் கி.தவளை போல திமுக ஊழல் திமுக லஞ்சம் என்று ஜன்னி கண்டவர் மாதிரி அனத்த வேண்டியது கேவலம்.

Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
14-அக்-201822:13:15 IST Report Abuse

Santhosh Gopalஅதாவது உங்களுக்கு ஜிங் ஜாங் அடிக்கிறவங்க நல்லவங்க, இதே அதிமுகவுக்கு அடிக்கிறவங்க கெட்டவங்க அப்படி தானே புகழ்? புகழ் உங்க கிட்ட ஒன்னு கேட்கிறேன், திமுக ஊழலே செய்யாத புனித கட்சி, திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியது உங்கள் பார்வையில், அப்படி என்றால் 2011 ல் ஏன் படுதோல்வி அடைந்தீர்கள்? சரி தமிழ்நாட்டில் மாறி மாறி தான் மக்கள் ஒட்டு போடுவாங்க என்றே வைத்து கொள்வோம், இரண்டாவது முறையும் ஏன் தோல்வி அடைந்தீர்கள்? இத்தனைக்கும் தனியாக நின்ற பெண்மணியிடம், அதுவும் சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே போயிட்டு வந்து தேர்தலை சந்தித்த பெண்மணியிடம், கூட்டணி சகிதம் போட்டியிட்டு ஏன் தோல்வி அடைந்தீர்கள்? ஊழலே செய்யாத கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டாமா? நல்லது மட்டுமே செய்யும் கட்சியை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள்? திமுக பொறுப்பான எதிர் கட்சியா மற்றவங்க மீது வழக்கு போடுறாங்க, அதற்கு நீங்க ஆதரவு தெரிவிக்கிறீங்க பரவாயில்லை, அதே பொறுப்புள்ள ஆளும் கட்சியாக அவங்க உங்க மேல கேசு போட்டா மட்டும் ஏன், கத்துறீங்க, தடை வாங்குறீங்க? தைரியமா கேஸை எதிர் கொள்ளவேண்டியது தானே? நீங்க மற்றவங்க மேல கேச போட்டா அது பொறுப்பு, பருப்பு, மற்றவங்க கேசு போட்டா அது அரசியல் காழ்ப்புணர்ச்சி.... இது தான் நீங்க கற்றுக்கொண்ட நியாயமா புகழ்? 9 வருஷம் ஆட்சியில இல்லைனா எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாதா? ஐந்து முறை ஆட்சியில் நீங்க தானே இருந்தீங்க, அவங்க எப்போவோ செய்த ஊழலை எதிர்த்து சுடலை கேசு போடுவாராம், அது நல்லதாம், எப்போவோ சுடலை செய்த ஊழலை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாதாம்? இது தான் உங்க ஞாயமா புகழ்? யாராலும் வழக்கு போட முடியாது, சரி, வழக்கு போட்டால் தான் அலறி அடித்து கொண்டு தடை வாங்குறீங்களே? 9 வருஷம் ஆட்சியில் இல்லாத கட்சிக்கு நீதிமன்றம் எப்படி ஆதரவு என்று கேட்கிறீர்கள், புகழ் நீங்க பக்கா திமுக அனுதாபி, அதே போல தங்கை ராஜாவும் பக்கா திமுக அனுதாபி, நீங்க ரெண்டு பெரும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறீர்கள், அதாவது நீங்கள் இரண்டு பெரும் திமுக வால் சிபாரிசு செய்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள், சுடலை வழக்கு தொடுக்கிறார், வழக்கு உங்களிடத்தில் வருகிறது, வருகிறது அல்ல, உள்ளே ஆட்களை வைத்து உங்களிடத்தில் தான் வழக்கு வரும் படி காய் நகர்த்துகிறார் சுடலை, நீங்க திமுகவிற்கு எதிராக தீர்ப்பு கொடுப்பீர்களா? அல்லது ஒரு திமுக தொண்டன் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்கிறார், அவரிடம் வழக்கு போனால் தீர்ப்பு எப்படி இருக்கும்? நீங்களே சொல்லுங்க புகழ்? அது போல திமுக தொடரும் வழக்குகளில், மற்றவர்களை சரமாரியாக கேள்வி கேட்பதும், அவர்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு வேதனை தெரிவிப்பதும், அதிமுக தொடரும் வழக்குகளை தள்ளுபடி செய்வதும், அல்லது தடை விதிப்பதும்.... அதனால் தான் தோட்டத்திற்கு எல்லாம் நீதிமன்றம் செல்கிறார் சுடலை....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-அக்-201819:47:41 IST Report Abuse

மலரின் மகள்முதலமைச்சர் ஊழல் செய்தால் அவருக்கு என்ன தண்டனை சரியாக இருக்கும்.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
15-அக்-201810:49:07 IST Report Abuse

நக்கீரன்தூக்கு தண்டனை....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-அக்-201819:46:11 IST Report Abuse

மலரின் மகள்பதவி விலக வேண்டும். உயர் பதவியில் இருப்பவர் மீது அதற்கான முகந்திரங்கள் இருப்பதால் தானே நீதி மன்றமே சிபிஐ விசரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இவர் குற்றம் செய்திருக்கவாய்ப்பில்லை என்றால் என்ன நடந்தது அதனால் என் இப்படி எடுத்து கொள்ளப்பட்டது என்பதை இவரே ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கமும் ஆவணங்களும் மக்கள் பிரதி நிதி சபை யில் தெரிவிக்கலாம். மக்களுக்கு விசாரணையின் குற்றம் என்ன சாட்டப்பட்டது என்பதை விளக்கி அது தவறு என்றால் எப்படி என்று விளக்காட்டுமே? முதல்வர் என்பதால் இவருக்கு கூடுதல் தார்மீக பொறுப்பு உள்ளது. பொதுவாக மக்கள் மனதில் யாரும் உத்தமர்கள் அல்ல அரசியலில். என்ற எண்ணம் ஆணித்தரமாக பதிந்து விட்டது. இவர்கள் யாரும் திறமையான நிருபர்களுக்கு நேரடி ஒளிபரப்பில் பேட்டி டஹ்ருவர்தக்ரு நடுங்கலாவது ஏன் என்று அனைவருக்குமே தெரியும். கீழ் உள்ளோரை முதலில் நிறுத்தி வைப்போம், மீ உயர் பதவியில் இருப்போரை நன்கு விசாரிக்கவேண்டும். இதில் இவர் தனது பணி செய்யமுடியவில்லை மக்கள் சேவை செய்ய முடியவில்லை என்று சாதகங்கள் பெற கூடாது. அப்படி முடியவில்லை என்றால் பதவி விலகட்டும் முதலில் அதன் பிறகு விசாரணையை எதிர்கொள்ளட்டும். பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களுக்கு மட்டுமே உயர் பதவியில் இருப்போர் பதவி விலகி இருக்கிறார்கள். லஞ்ச குற்றத்திற்கு அல்ல. நமது சமுதாயம் பாலியல் ரீதியான குற்றத்தை தான் குற்றமாக பார்க்கிறது என்றும் லஞ்சம் என்பதை ஏற்று கொண்டதாகவும் மாறி இருக்கிறதா? குற்றவாளி அரசியல் வாதிகளின் குடும்பத்தினர் லஞ்சத்தில் மகிழ்வதால் அதன் சுகம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரடியாக செல்வதால் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் அதை. அதே நேரம் பாலியல் குற்றச்சாட்டுகளில் மாட்டி கொண்ட அக்பர் ஷெர்ஷா பாபர் போன்றோர் குடும்ப உறுப்பினர்கள் முன்னாலேயே தலைகுனிய வேண்டி இருக்கிறது என்பதால் உடனடியாக பதவியிலிருந்து வெளியேற வில்லை என்றால் சமூக ஊடகங்கள் மக்களை தாய் தொடர்ந்து பேசி கொண்டே இருப்பார்கள் எனப்தற்காக அதிலிருந்து ஒளிந்து கொள்ள ராஜினாமா செய்து விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். மிக உயர்ந்த பதவியில் இருப்போர் ஊழல் செய்யும் பொது அவர்ளுக்கு தண்டனையாக கண்களை மற்றும் குருடாக்கி விட்டால் என்ன? லேசர் முறையில் எந்த வலியம் இல்லாமல் சில நிமிடத்தில் செய்து விடலாமாம். அப்படி செய்து விட்டால் ஊழல் குறையும் அல்லவா? பரிந்துரைக்கலாமா?

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X