பதிவு செய்த நாள் :
விஸ்வரூபம்!
நிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் குளறுபடி
அதிக விலைக்கு வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு
பிரச்னை எழுப்ப வரிந்து கட்டுகிறது தி.மு.க.,

தமிழக மின் வாரியத்தில் நடந்த, நிலக்கரி கொள்முதல் குளறுபடி, திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 'டெண்டர்' விடாமல், அதிக விலைக்கு, தனியாரிடம் நிலக்கரி வாங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, வழக்கு தொடர, தி.மு.க., தலைமை வரிந்து கட்டுகிறது.

நிலக்கரி, கொள்முதல், குளறுபடிசென்னை, எண்ணுார் துறைமுகம் வழியாக, 24 லட்சம் டன்; துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, ஆறு லட்சம் டன் நிலக்கரி வாங்க, மின் வாரியம் சார்பில், ஆகஸ்டில், 'டெண்டர்' கோரப்பட்டது.அதில், துாத்துக்குடி வழியாக, டன், 4,825 ரூபாய் விலையில், ஆறு லட்சம் டன் வாங்க, செப்டம்பரில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு, 'ஆர்டர்' வழங்கப்பட்டது.

சிறப்பு அனுமதி :

எண்ணுார் வழியாக, நிலக்கரி சப்ளை செய்யும் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், டன்னிற்கு, 5,400 ரூபாய்க்கு மேல் விலை கோரின. அது, அதிகம் என்பதால், நான்கு லட்சம் டன்னை குறைத்து, 20 லட்சம் டன் வாங்க, செப்டம்பர் இறுதியில், புதிய டெண்டர் கோரப்பட்டது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த, செட்டிநாடு நிறுவனமும், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதை சேர்ந்த, 'மகேஷ்வரி பிரதர்ஸ்' நிறுவனமும் பங்கேற்றன. ஐதராபாத் நிறுவனம், 4,968 ரூபாய் விலைப்புள்ளி வழங்கியது. இது, செட்டிநாடு வழங்கியதை விட குறைவு. அதே சமயம், சந்தையில், நிலக்கரி விலை, 4,800 ரூபாய்க்குள் தான் உள்ளது. ஆனாலும், அந்நிறுவனம் கோரிய அதிக விலைக்கு, 10 லட்சம் டன் வாங்க, வாரியம் முயற்சிப்பதாக, நமது நாளிதழில், 7ம் தேதி, செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது, ஐதராபாத் நிறுவனத்திற்கு, அதே விலைக்கு, மின் வாரியம், ஆர்டர் வழங்கியுள்ளது. இதுவரை, எண்ணுார் துறைமுகம் வாயிலாக பெறப்படும் நிலக்கரிக்கு தான், குறைந்த விலை வழங்கப்படும். அதை விட, டன்னுக்கு, 200 - 300 ரூபாய் அதிகமாக, துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, வாங்கப்படும் நிலக்கரிக்கு தரப்படும். தற்போது, முதல் முறையாக,

எண்ணுார் துறைமுகத்திற்கு அதிக விலைக்கும், துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக வாங்குவதற்கு, குறைந்த விலைக்கும், ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, டெண்டர் கோரப்படாமல், தமிழக அரசிடம், சிறப்பு அனுமதியை பெற்று, 'யாசின் இம்பெக்ஸ் இந்தியா' நிறுவனத்திற்கு, ஒரு டன், 5,098 ரூபாய் விலையில், 40 ஆயிரம் டன்னும், 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனத்திற்கு, டன், 5,008 ரூபாய்க்கு, 35 ஆயிரம் டன் வாங்கவும், ஆர்டர் தரப்பட்டுள்ளது. இவ்வாறு, சந்தையை விட, அதிக விலைக்கு வாங்குவதாலும், டெண்டர் கோராமல் நிலக்கரி வாங்குவதாலும், மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலைஉருவாகியுள்ளது. நிலக்கரி கொள்முதலுக்கு, விண்ணப்ப டெண்டர் முறை தான், முதலில் அமலில் இருந்தது. அதில், நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, அதிக விலை வழங்கின. அந்த விலைக்கே, மின் வாரியமும் வாங்கியது. முதல் முறையாக, 2016 இறுதியில், இணையதள ஏல முறையில், 'டெண்டர்' கோரப்பட்டது. இந்த முறையில், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், விலைப்புள்ளி யுடன், ஏல தொகையையும் தெரிவிக்க வேண்டும். அதில், எது விலை குறைவோ, அதுவே ஏற்கப்படும். அதன்படி, எண்ணுார் துறைமுகம் வழியாக, டன் நிலக்கரி, 4,810 ரூபாய் விலையில், 14 லட்சம் டன்; துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, ஒரு டன், 4,943 ரூபாய் விலையில், 6 லட்சம் டன் வாங்க, ஆர்டர் வழங்கப்பட்டது. அப்போது, சந்தையில், ஒரு டன், 5,200 ரூபாய்க்கு மேல் இருந்தது. புதிய டெண்டர் முறை மற்றும் அதிரடி விலை குறைப்பு பேச்சால், 100 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமானதாக, மின் வாரியமே தெரிவித்தது. தற்போது, சர்வதேச சந்தையில், நிலக்கரி விலை குறைவாக உள்ளது. ஆனால், டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், அதிக விலை புள்ளி வழங்கின. இதனால் தான், 24 லட்சம் டன்னுக்கு, டெண்டர் கோரியும், அதில் முடிவு எடுக்கவில்லை. பின், மீண்டும், 20 லட்சம் டன்னுக்கு, டெண்டர் கோரிய வாரியம், அதில், 10 லட்சம் டன் மட்டும் வாங்க, ஆர்டர் தந்துள்ளது.அதோடு, முதல் முறையாக, துாத்துக்குடி துறைமுகத்திற்கு குறைந்த விலையும்; எண்ணுாருக்கு அதிக விலையும் வழங்கப்பட்டு உள்ளது.தற்போது, 'கோல் இந்தியா'விடம், டன், 3,685 ரூபாய்க்கு வாங்குவதாக கூறும் வாரியம், இறக்குமதிக்கான சந்தை விலையை தெரிவிக்கவில்லை. அதிலிருந்தே, சந்தை யை விட, அதிக விலைக்கு ஆர்டர் வழங்கியது உறுதியாகியுள்ளது. ஜூலைமாதம், சட்டசபை முடிந்ததும், மத்திய தணிக்கை அறிக்கை வெளியானது. அதில், ஏற்கனவே நடந்த, 'நிலக்கரி கொள்முதலில், தவிர்த்திருக்க வேண்டிய செலவு, 746 கோடி ரூபாய்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisementதண்ட செலவு : தணிக்கை குற்றச்சாட்டு குறித்து, சட்டசபை பொது நிறுவனங்கள் குழு விசாரிக்கலாம். தற்போது, அந்த குழுவில், தி.மு.க.,வை சேர்ந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள், குழு கூட்டத்தை நடத்த கோரி, நிலக்கரி தண்ட செலவு குறித்து, மின் துறை அதிகாரிகளை அழைத்து விசாரிக்கலாம். அப்போது, மத்திய தணிக்கை அதிகாரிகளும் இருப்பர். அவர்கள், என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று, உதவுவர். துறை அதிகாரிகள், முறையான பதில் தரவில்லை எனில், தவறுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்கலாம். கேரளாவில், பொதுத் துறை நிறுவனங்களின் இழப்பு தொடர்பாக, அம்மாநில சட்டசபை குழுக்கள், கேள்விகளை எழுப்பி, முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றன. தற்போது, நிலக்கரி தொடர்பாக, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. குறிப்பாக, தி.மு.க., தரப்பில், நீதிமன்றத்தில், ஊழல்கள் குறித்து, வழக்கு தொடரப்படுகிறது. இதனால், நிலக்கரி முறைகேடுகள் குறித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தி.மு.க., தயாராகி வருகிறது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

'துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, பெரிய கப்பலில் நிலக்கரி வர உள்ளதால், தற்போது, அதிக விலை தரப்பட்டுள்ளது' என்றார்.எவ்வளவு தேவை?மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்த, ஆண்டுக்கு, 2.60 கோடி டன் நிலக்கரி தேவை. அதில், 2.05 கோடி டன், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள, மத்திய சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. எஞ்சிய நிலக்கரி, தனியாரிடம் வாங்கப்படுகிறது. தனியாரிடம் வாங்க மட்டும், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. அதற்கான தொகை, அமெரிக்க டாலரில் வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது, துாத்துக்குடி துறைமுகத்திற்கு, 67.02 டாலர்; எண்ணுாருக்கு, 69 டாலர் என, வாங்கப்படுகிறது. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
14-அக்-201812:32:39 IST Report Abuse

sahayadhasஉள்ளே வரும் போது முதலீடு செய்கிறான் வெளியே செல்லும் போது வட்டியுடன் திரும்புகிறான் .தொழில் செய்பவர் நஷ்டப்பட விரும்புவதில்லை

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201811:48:11 IST Report Abuse

Pugazh V9 ஆண்டு கள் அதிமுக ஆட்சி. நிலக்கரி கொள்முதலில் கொள்ளை என்றால்.... அந்த செய்தி யின் விவரங்களை படித்து.. ஆளும் அதிமுக வை கண்டிக்கிற திராணி இருக்க வேண்டும். இல்லையா..பேசாமலிருக்கணும். அதென்ன திராவிடர் கட்சிகள்?? தமிழிசை என்கிற திராவிடர் தலைமை வகிக்கிற, பொ.ரா.கி என்கிற இன்னொரு திராவிடர் அமைச்சராக இருக்கிற பிஜேபி திருட்டு ஊழல் கட்சி என்று ஒத்துக் கொள்கிறீர்கள் இல்லையா?? அதல்ல..திராவிட என்கிற வார்த்தை இருக்கும் கட்சிகளை சொல்கிறீர்கள் என்றால்..இந்த வார்த்தை இல்லாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யை ஏன் எதிர்க்கிறீர்கள்? திராவிட என்ற வார்த்தை இல்லாத கம்யூனிஸ்ட் கட்சியை ஏன் எதிர்க்கிறீர்கள்?? அந்த வார்த்தை என்பதெல்லாம் சும்மா வேஷம். நீங்கள் இனவெறி பிடித்தவர்கள். ஜாதிவெறி பிடித்தவர்கள். பகரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். பதிவிடுங்களேன் வாசகர்கள் சிந்தனைக்காக. // மிக்க நன்றிகள்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201811:41:04 IST Report Abuse

Pugazh Vஅதிமுகவினரின் அனைத்து ஊழல்கள் தவறுகள் அனைத்திற்கும் பீஜேபீயினர் முட்டுக்கொடுத்து, நியாயப்படுத்தி, அதிமுகவினரின் லஞ்ச லாவண்யங்களை சப்போர்ட் பண்ணிவிடுவார்கள். வரும் தேர்தலில் கூட்டணி வேண்டுமே.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X