பதிவு செய்த நாள் :
பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கொலை மிரட்டல்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை, வரும் ஆண்டில் கொலை செய்ய உள்ளதாக, டில்லி போலீஸ் கமிஷனருக்கு, 'இ - மெயில்' வந்ததையடுத்து, பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர், மோடி, பாதுகாப்பு

குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, மோடிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தது. பிரதமராக பதவியேற்ற பின், இந்த அச்சுறுத்தல் அதிகரித்தது. இதையடுத்து, முந்தைய பிரதமர், மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விட, இரு மடங்கு அதிகமாக, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில், 1,000 கமாண்டோ போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களில்நடக்கும், அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பகுதிகளில், கமாண்டோ போலீசார் தீவிர சோதனை நடத்துவதுடன், வான்வெளியையும் கண்காணிப்பர். பிரதமர் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும், 100 மீ., தொலைவுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை செயலிழக்கச் செய்யும் நவீன, 'ஜாமர்' பொருத்தப்பட்ட வாகனமும் உடன் செல்லும்.

ஏற்கனவே, பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்விடுக்கப்பட்டதை அடுத்து, அவரது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

Advertisement

. இம்முறை, டில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்நாயக்குக்கு வந்த, இ - மெயிலில், 2019ல், குறிப்பிட்ட தேதியில், பிரதமரை கொல்ல இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.இதுகுறித்து, பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத்துறையினரை, டில்லி போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால், பிரதமரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.அசாம் சிறையில் இருந்து, கொலை மிரட்டல் இ - மெயில் வந்ததால், அங்கு, பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
18-அக்-201805:13:12 IST Report Abuse

ashak2019 therthal varai intha kaamadi thodarum

Rate this:
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
14-அக்-201820:34:11 IST Report Abuse

Rajhoo VenkateshThis is wrong news, Delhi police has already denied this.

Rate this:
Godwin jose - chennai,இந்தியா
14-அக்-201819:10:08 IST Report Abuse

Godwin joseஇவரை கொலை செய்து யாருக்கு என்ன பயன்? குரைக்கிற நாய் கடிக்காது. இது இருக்கட்டும்.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X