அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
20 தொகுதிகளில் போட்டி: அமித் ஷா, 'பிளான்'

வரும் லோக்சபா தேர்த லில், ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைத்து, 20 தொகுதிகளில் போட்டியிட, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

ரஜினி, அமித்ஷா, லோக்சபா


நாமக்கல்லில், இன்று நடக்கவுள்ள, ஹிந்து தன்னெழுச்சி மாநாட்டில், ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வலுவான கூட்டணி :

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:அடுத்த ஆண்டு, மே மாதம் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலில் போட்டியிட வசதியாக, இந்த ஆண்டின் இறுதியில், நடிகர் ரஜினி, தன் கட்சியை துவக்கவுள்ளார். தற்போதைய சூழலில், லோக்சபா தேர்தலில், வலுவான கூட்டணியுடன் களம் இறங்கினால், வெற்றி உறுதி என, ரஜினியிடம், அவரது அரசியல் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த ஆலோசகரிடம், ரஜினி, 'அப்படி என்றால், யாருடன் கூட்டணி வைக்கலாம்' என, கேள்வி கேட்டுள்ளார். அந்த ஆலோசகர், 'நீங்கள், முதலில் கட்சி ஆரம்பியுங்கள்; உங்களிடம்,

மக்களை கவரும் வசீகரம் இருக்கிறது. அந்த செல்வாக்கின் அடிப்படையில் கூட்டணிக்கு,பா.ஜ., மட்டு மல்ல, காங்கிரஸ், அ.தி.மு.க., போன்ற கட்சிகளும் தேடி வரும்' என்றார்.இந்நிலையில், டில்லியில் நடந்த, பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் தேசிய தலைவர்அமித் ஷா, 'தமிழகத்தில், 20 தொகுதிகளில், தாமரை மலரும்'என்றார். அமித் ஷாவின் பேச்சுக்கு பின்னணியில், கூட்டணி கணக்கு உள்ளது. அதாவது, பா.ஜ., - ரஜினி கூட்டணியில், தென் மாவட்டங்களில் உள்ள, சில ஜாதி கட்சிகளும் சேருகின்றன. லோக்சபா தேர்தலை சந்திக்க, இந்த பலம் போதும் என, அமித் ஷா கருதுகிறார். அதாவது, ரஜினி கட்சி யும், பா.ஜ.,வும், தலா, 20 தொகுதிகள் பிரித்துக் கொண்டு, தேர்தலை சந்திப்பதற்குரிய திரைமறைவு பேச்சும் நடத்தப்பட்டுள்ளது. அதனால் தான், பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், '20 தொகுதிகளில் தாமரை மலரும்' என, அமித் ஷா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஒருவேளை, லோக்சபா தேர்தலில், ரஜினி கட்சி போட்டியிட விரும்பவில்லை என்றால், அ.தி.மு.க.,வுடன், 20 தொகுதிகளை பெற்று போட்டியிடும், மாற்று திட்டத்தையும், அமித் ஷா வகுத்துள்ளார். தற்போது, ரஜினியின் முடிவுக்காக, பா.ஜ., மேலிடம் காத்திருக்கிறது. பிரதமர் மோடியிடம், ஒரு நாளிதழ் சார்பில் எடுக்கப்பட்ட சிறப்பு பேட்டியில், 'ரஜினி, கட்சி துவங்கினால், அந்த கட்சியோடு, பா.ஜ., கூட்டணி அமைக்குமா?' என, கேட்கப்பட்டது. அதற்கு, பிரதமர் மோடி,

Advertisement

'உங்கள் கேள்வியே, 'துவங்கினால்' என, துவங்குகிறது. சந்தேகமில்லாமல் ரஜினியை, அவருடைய சாதனைகளுக்காக, நான் மதிக்கிறேன். ஆனால், நிச்சயமாக, யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு, நான் பதில் அளிக்க மாட்டேன்' என்றார்.

பகிரங்க அழைப்பு :

எனவே, லோக்சபா தேர்தலுக்கு முன், ரஜினி கட்சியை துவக்கவில்லை என்றால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையும் என்பதை, சமீபத்தில், டில்லி யில் நடந்த, முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி சந்திப்பும் வெளிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று நாமக்கல்லில், ஹிந்து தன்னெழுச்சி மாநாடு நடக்கவுள்ளது.மூத்த தலைவர், இல.கணேசன், 'சேவா இன்டர்நேஷனல்' ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார், துறவி ரமண பாரதி, ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில், ஆன்மிக அரசியல் குறித்து பேசப்பட உள்ளதால், அதை நோக்கி பயணிக்கும் ரஜினிக்கு, பகிரங்க அழைப்பு விடப்படும் என, தெரிகிறது.இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் கூறின.


Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi.v - doha,கத்தார்
16-அக்-201820:07:09 IST Report Abuse

ravi.vவாழ்த்துக்கள், தமிழக்கத்தில் ஹிந்து விரோத திருட்டு திக , திமுக ஒழிய அரிய வாய்ப்பு

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-அக்-201814:21:52 IST Report Abuse

Malick Raja40.தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலும் நாமப்பட்டையை வெற்றியாக பெற்று நோட்டா வின் கீழ் ஓட்டுக்களை பெற்று வெற்றிவாகை சூடுவதுமட்டும் உறுதி

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-அக்-201812:16:07 IST Report Abuse

Malick Rajaஅட்றா சக்கை .. அவளே இல்லையாம் குழந்தைகள் ஐந்தாராம் என்ற கதையில் ..குஜராத்தி கணக்கு போடுவது பழமிருக்க சுளை முழுங்கிய கதை போன்றல்லவா இருக்கிறது .. பெட்ரோல் விலை மட்டுமே போதும் உங்களை அழித்து முடிப்பதற்கு.. எந்த சங்கை கடந்த தேர்தல்களில் ஊதினீர்களோ ...வரும் தேர்தல்களில் அதே ட்யூனில் ஆயிரம் சங்குகள் ஊதி அல்லவா முடிவு வரும் .

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
17-அக்-201814:24:10 IST Report Abuse

RameshWe all are going to see that again Present PM would be PM in 2019 as well as 2024...People will vote for him...Not to worry ...Jai Hind...

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X