அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழனிசாமிக்கு நெருக்கடி : மந்திரிகளுக்கு மகிழ்ச்சி

ஊழல் புகாரை, சி.பி.ஐ., விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, முதல்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்களுக்கும், பன்னீர் தரப்பினருக்கும், இது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழனிசாமி, முதல்வர், பன்னீர்செல்வம்

ஜெயலலிதா இருந்த வரை, அமைச்சர்கள் அனைவரும், அவருக்கு கட்டுப்பட்டு இருந்தனர். அவரது மறைவுக்கு பின், அமைச்சர்கள், சுதந்திரப் பறவைகளாகி விட்டனர்; கேள்வி கேட்க ஆள் இல்லாததால், தன்னிச்சையாக செயல்படுகின்றனர். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுவது சிரமம் என்பதை உணர்ந்து, 'காற்றுள்ள போதே துாற்றிக்கொள்' என்ற பழமொழிக்கேற்ப, புகுந்து விளையாடத் துவங்கி உள்ளனர்.


குற்றச்சாட்டுக்கு ஆளாவோர், தார்மீக பொறுப்பேற்று, பதவி விலகுவது மரபு.ஆனால், குட்கா விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரும்,அதிகாரிகளும் பதவி விலகவில்லை. அதேபோல, சொத்து குவிப்பு புகாருக்குள்ளான, ராஜேந்திர பாலாஜி, முட்டை கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சரோஜா, 'டெண்டர்' முறைகேடு புகார் சுமத்தப்படும் வேலுமணி போன்ற அமைச்சர்களும் பதவி விலகவில்லை. இந்நிலையில், முதல்வர் மீதும், ஊழல் புகார் எழுந்தது. நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை, தன் உறவினர்களுக்கு வழங்கியதில், முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இது தொடர்பாக, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், சி.பி.ஐ.,விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது, முதல்வருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 'அவர் உடனே பதவி விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

Advertisement

இதனால், பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே ஊழல் புகாருக்குள்ளான அமைச்சர்கள், இனி, தங்களை பதவி விலகும்படி, முதல்வரால் கூற முடியாது என்பதால், மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சமீபத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை சந்தித்ததாக, தினகரன் கூறியது, பன்னீருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால், பழனிசாமி தரப்பினர் உற்சாகத்தில் இருந்தனர். தற்போது, சி.பி.ஐ., விசாரணை என்ற உத்தர வால், பழனிசாமி தரப்பினர் நிலைகுலைந்து உள்ளனர். இப்போது, பன்னீர் ஆதரவாளர்கள், உள்ளுக்குள் உற்சாகத்தில் உள்ளனர். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
19-அக்-201804:41:33 IST Report Abuse

anandகுட்டி திருடர்கள்..மலை முழுங்கி திமுக வேண்டாம்

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201822:41:58 IST Report Abuse

BhaskaranEnnathaan irunthaalum thalaivarai vittu kodukka koodaathu manthirikale

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201821:24:34 IST Report Abuse

Pugazh Vமந்திரிகளா மகிழ்ச்சி வேணாம்.. தல போய் டெல்லி தல கூட டீல் போட்டு வந்திருக்கிறது. தொடமுடியாது. இந்த லஞ்ச ஊழல் தலய பொத்தி காப்பாத்திடுவார் தெரியும் ல....ஓட்டு மச்சான்ஸ் ஓட்டு.. பதவி கண்ணா பதவி..டெல்லி தல க்கு இது மட்டும் தான் குறி.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X