திருமணமாகாத மாணவியருக்கு பரிசு வழங்க பீஹார் அரசு முடிவு

Added : அக் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement

பாட்னா:பீஹார் மாநிலத்தில், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த, திருமணமாகாத பள்ளி மாணவியருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, அம்மாநில அரசுதுவங்கியுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடப்பதால், பெண் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது.
குழந்தை திருமணங்களை தடுக்கவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கவும், பிளஸ் 2 தேர்வு எழுதிய, திருமணமாகாத மாணவியருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, மாநில அரசு முடிவு செய்தது.இந்த திட்டத்துக்கு, முதல்வர் நிதிஷ் குமார் அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த திட்டம், வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, பிளஸ் 2 படிக்கும், திருமணமாகாத மாணவியர் குறித்த விபரங்களை சேகரிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-அக்-201808:49:00 IST Report Abuse
Srinivasan Kannaiya இதிலும் ஊழல் இருக்கும்
Rate this:
Share this comment
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
14-அக்-201813:52:04 IST Report Abuse
 Muruga Velவாய பினாயில் போட்டு கழுவு ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X