அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொன்னையன் அறிவிப்பு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Added : அக் 14, 2018
Advertisement

சென்னை:'ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய, முதல்வர் பழனிசாமியை, கவர்னர், 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:முதல்வர் பழனிசாமி மீதுள்ள, 3,120 கோடி ரூபாய், நெடுஞ்சாலை துறை ஊழலை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்ட, சில மணி நேரங்களில், அ.தி.மு.க., அலுவலகத்தில், அக்கட்சியின் அமைப்பு செயலர் பொன்னையன், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்; இது, கண்டிக்கத்தக்கது.லஞ்ச ஊழல் தடுப்பு துறை, தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. விஜிலென்ஸ் கமிஷனரும், தன்னாட்சி அதிகாரம் பெற்றவர் என, உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் எடுத்து வைத்த வாதங்களை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது.அதை உறுதிப்படுத்தும் வகையில், பொன்னையனின் பேட்டி அமைந்துள்ளது.
லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையின் மேல்முறையீடு குறித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர், எப்படி முடிவு செய்ய முடியும்?அவரது பேட்டி, லஞ்ச ஊழல் தடுப்பு துறை, அ.தி.மு.க., அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல; அ.தி.மு.க., என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதை தெளிவாக்குகிறது.
ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு ஆளாகிய, முதல்வர் பழனிசாமி, பதவியில் நீடிக்கும், அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்து விட்டார். எனவே, உடனே பதவி விலக வேண்டும். அவர் விலக மறுத்தால், கவர்னர், அவரை நீக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X