பொது செய்தி

இந்தியா

பிரபல இசைக் கலைஞர் அன்னபூர்ணா காலமானார்

Added : அக் 14, 2018
Advertisement
 பிரபல இசைக் கலைஞர் அன்னபூர்ணா காலமானார்

மும்பை:பிரபல ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரும், சிதார் இசைக் கலைஞர், ரவி சங்கரின் முன்னாள் மனைவியுமான, அன்னபூர்ணா தேவி, 92, உடல் நலக்குறைவால், நேற்றுகாலமானார்.
மத்திய பிரதேச மாநிலம், மாய்ஹர்பகுதியை ஆட்சி செய்த, மஹாராஜா, பிரிஜ்நாத் சிங்கின் அரசவையில், கவிஞராக இருந்தவர், அலாவுதீன் கான். 1927ல் இவரது மகளாக பிறந்த, ரோஷ்னரா கான், சிறுமியாக இருந்த போதே, ஹிந்துஸ்தானி இசையை கற்று அதில் சிறந்து விளங்கினார்.இவரின் இசை திறமையை பார்த்து வியந்த மஹாராஜா, பிரிஜ்நாத், ரோஷ்னராவுக்கு, அன்னபூர்ணா தேவி என, பெயர் சூட்டினார்.
சிதார் இசைக் கருவி வாசிப்பதை விரும்பி கற்ற அன்னபூர்ணா, 1941ல், பிரபல சிதார் இசைக் கலைஞர், ரவி சங்கரை திருமணம் செய்தார்.பின், இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1962ல் விவாகரத்து செய்த ரவி சங்கர்,அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அதன் பின், 1982ல், ரூசிகுமாரை, அன்ன பூர்ணா திருமணம் செய்தார். ரூசிகுமார், 2013ல், மாரடைப்பால் காலமானார்.
மும்பையில், வசித்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக, வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று அதிகாலை காலமானார். அவரின் மறைவுக்கு, இசைக் கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X