'தித்லி' புயல் சேதத்துக்கு நிவாரணம் ரூ.1,200 கோடி

Added : அக் 14, 2018
Advertisement

விஜயவாடா:'தித்லி' புயல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக,1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் சமீபத்தில், தித்லி புயல் தாக்கியதில், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன.இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதியில், தித்லி புயல் தாக்கியதில், அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்தன.குறிப்பாக, ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை, முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. தித்லி புயலால் ஏற்பட்ட சேதம், ௨,௮௦௦ கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில், போர்க்கால அடிப்படையில், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை, மாநில அரசு மேற்கொண்டுள்ளது. புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு, ஆந்திராவுக்கு மத்திய அரசு, நிதியுதவி செய்ய வேண்டும். குறைந்தது, 1,200 கோடி ரூபாய் ஒதுக்கி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X