சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் நடந்தது பிரசவம் சாக்கடையில் விழுந்தது குழந்தை

Added : அக் 14, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 ரோட்டில் நடந்தது பிரசவம் சாக்கடையில் விழுந்தது குழந்தை

உடுமலை:உடுமலை அருகே, வீதியில் நடந்த பிரசவத்தில், குழந்தை சாக்கடையில் விழுந்து இறந்தது; தாய்க்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, சின்ன வீரம்பட்டியில், நேற்று காலை, தொப்புள் கொடியுடன் பெண் சிசு, சாக்கடையில் இறந்துக் கிடந்தது. குழந்தையைப் பெற்ற பெண், ரத்தப்போக்கால் அருகிலேயே மயங்கிய நிலையில் கிடந்தார்.பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சில், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாடு, பாலமுத்துாரைச் சேர்ந்த, செந்தில் மனைவி ரேணுகாதேவி, 23, என தெரிந்தது.ஆறு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்து, ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருப்பூர், பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். சொந்த ஊருக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவர், நேற்று முன்தினம் மாலை, பஸ்சில் இருந்து இறங்கி, உடுமலை, சின்னவீரம்பட்டி பஸ் ஸ்டாப் நிழற்குடையில் அமர்ந்துள்ளார்.
அப்பகுதியில் சுற்றி வந்தவருக்கு, நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டு, ரோட்டில் புரண்டுள்ளார். குழந்தை பிறந்ததும், சுயநினைவு இல்லாமல் மயங்கியுள்ளார். அருகிலுள்ள, சாக்கடையில் விழுந்ததில், குழந்தை இறந்து விட்டது.பெற்றோருக்கும், கணவருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
16-அக்-201809:35:28 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஏழ்மையால் வந்தவினை , நிறைமாதம் கர்பிணி என்னாத்துக்கு ரிஸ்க் எடுத்து பயணம் போனது பெரிய தப்பு ஒருபாவமும் செய்யாத சிசுவுக்கு தண்டனை சாக்கடையிலே செத்துப்போச்சு பாவம் , பிள்ளையில்லேன்னு கோயில்கோயிலா போயிண்டு தவமிருக்கும் பலருக்கு கிடைக்கலே பிள்ளைவரம் இவாளுக்கெல்லாம் ???????????????????
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-அக்-201813:54:41 IST Report Abuse
தமிழ்வேல் நிறை மாதத்திலும் தூரத்திற்கு பஸ் எடுத்து வேலைக்கு சென்று சம்பாதித்திக்க வேண்டிய நிலைமை. 2 ஆண்டுகளுக்குமேல் வேலை செய்யும், ஏழ்மையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கடைசி 3 மாதங்கள் விடுமுறையுடன் கால் சம்பளம் கம்பெனியாலும் அல்லது நகரசபையாலும் கால் சம்பளம் அரசாளும் தந்து உதவலாம். (ஆனால் இதற்கும் லஞ்சம் தர வேண்டுமென்றும் அதற்காக அலைய வேண்டும் என்றும் அணுக மாட்டார்கள்)...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-அக்-201808:51:28 IST Report Abuse
Srinivasan Kannaiya மனித நேயம் செத்து விட்டது...
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
15-அக்-201816:11:28 IST Report Abuse
kalyanasundaram it is the ripe time for papu to question BJP government as to why such incidence happened on road
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X