பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம்

Added : அக் 14, 2018
Advertisement
 தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம்:வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை, ஆர்.டி.ஓ., சந்தோஷினி சந்திரா கொடியசைத்து துவக்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நசீர் இக்பால், துணை தாசில்தார் அன்புராஜ், சப் இன்ஸ்பெக்டர் பொட்டா, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வி.ஏ.ஓ., வெங்கடாசலம், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இன்பேண்ட் மெட்ரிக், சக்தி மற்றும் பாத்திமா மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கப் பயிற்சியளித்தனர்.அதில், பேரிடர் காலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறுவது, எண்ணெய் தீ விபத்து, காஸ் சிலிண்டர் தீ விபத்துகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X