பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலையத்திற்கு கடைகள் அகற்றம்

Added : அக் 14, 2018
Advertisement

மந்தாரக்குப்பம்:மந்தாரக்குப்பம் - நெய்வேலி டவுன்ஷிப் செல்லும் சாலையில் வடக்கு வெள்ளுரில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் இருந்த வீடுகள், கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக இடத்தை கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி., நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதையொட்டி மந்தாரக்குப்பத்தில் உள்ள பஸ் நிலையத்தை வடக்கு வெள்ளுரில் மாற்றி அமைக்கும் பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது.மேலும், அங்கிருந்த கடை மற்றும் வீடுகளை என்.எல்.சி., சார்பில் அகற்றி கொள்ளும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை என்.எல்.சி., இடத்தில் பல ஆண்டு காலமாக குடியிருந்த 8 வீடுகள், 13 கடைகள் டி.எஸ்.பி., சுந்தரவடிவேலு, தாசில்தார் ஸ்ரீதரன், என்.எல்.சி., அதிகாரிகள் மேற்பார்வையில் அகற்றும் பணி நேற்று துவங்கியது.என்.எல்.சி., 2ம் சுரங்க நுழைவு வாயில் முன்பு உள்ள கடைகளை என்.எல்.சி., நிர்வாகம் அகற்ற வந்த போது வர்த்தக சங்க நிர்வாகிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், என்.எல்.சி., அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.முறையாக கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கமால் கடைகளை அகற்றக் கூடாது எனவும், மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும், வருவாய்துறை மூலம் இடத்தை அளவீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து அளவீடு செய்த பின்னர் கடைகள் அகற்றப்படும் என கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் பாதை, சாலை அமைக்கும் பணி, பயணிகள் இருக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து என்.எல்.சி., அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X