பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய கட்டடம் அகற்றம்

Added : அக் 14, 2018
Advertisement

மூணாறு:மூணாறில் முதிரைபுழை ஆற்றின் கரையோரம் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை ஊராட்சியினர் அகற்றினர்.மூணாறில் கடந்த ஆகஸ்ட்டில் பெய்த கன மழையில், முதிரைபுழை ஆற்றில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கால்,நகரில் ஏராளமான கடைகளை வெள்ளம் சூழ்ந்தது. அதனை பொருட்படுத்தாமல், நகரில் சர்ச்சில் பாலம் அருகே வர்த்தகர் ஒருவர், தனது கடையின் பின்புறம் முதிரைபுழை ஆற்றின் கரையோரம் விதிமுறைகளை மீறி கழிப்பறைக்கு கட்டடம் கட்டி வந்தார். அப்பணிகளை ஊராட்சி கண்டு கொள்ளவில்லை.ஆனால் கட்டுமானம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் வேறு வழியின்றி கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X