பொது செய்தி

தமிழ்நாடு

குறைகிறது ஒழுங்கீனங்கள்... தீயவைகளுக்கு இடமில்லை

Added : அக் 14, 2018
Advertisement

சிவகாசிஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏராளமான பிரச்னைகள் வந்து செல்கின்றன. யாராக இருந்தாலும், பணிபுரியும் இடங்களில் எப்படியாகினும் ஏதேனும் ஒரு இனம் புரியாத பயமோ பிரச்னையோ வந்து கொண்டே இருக்கும். அந்த கோபத்தை வீட்டிலுள்ளவர்களிடம் காண்பிக்க நேரிடும். பள்ளி , கல்லுாரி மாணவர்களுக்கும் படிக்கிற இடங்களில் மன அழுத்தம் ஏற்படும். இத்தகைய பிரச்னைகளை எளிதாக கையாளவும், அதிலிருந்து விடுபடவும் ஆசனங்கள்,யோகா மற்றும் தியானங்கள் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. அதிலும் தியானம் என்பது ஒவ்வொருவருக்கும் மனதில் அமைதியை ஏற்படுத்தும். அனைவரும் தங்கள் பிரச்னைகளில் இருந்து விடுபடவும், மனதில் அமைதி ஏற்படவும் கோயிலுக்கு செல்கின்றனர். இறைவனிடம் வேண்டும் போது அனைவரும் அமைதியாக தியான நிலையில் இருப்பர். இறைவன் பிரச்னையை தீர்க்கிறாரோ இல்லையோ, ஆனால் அந்த தெய்வீக சூழ்நிலை அதிலிருந்து விடுபட உதவுகிறது. இதயத்தை மையமாக வைத்து செய்யப்படும் தியானம் இதயத்திற்கு இதம் தரும். உடல் , மனதிற்கு லேசான தன்மை பெறும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. நடத்தையிலும், மனோபாவங்களிலும் மாற்றம் ஏற்படுகிறது. மன ஒருமைப்பாடு, மனதின் மீது ஆளுமை, நோய் எதிர்ப்பு சக்தி துாண்டப்படுகிறது. மேலும் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகிறது. இதய தியானம் எல்லோரும் எளிதில் செய்யக்கூடிய ஒன்றே. ஆனால் அதை யாரும் முறையாக செய்து பார்ப்பதும் இல்லை , அனுபவிப்பதும் இல்லை. சிவகாசி சகஜ மார்க்க இயற்கை வழி தியானம் அமைப்பினர், பள்ளி , கல்லுாரி மாணவர்களுக்கு தியானத்தை இலவசமாக கற்றுத் தருகின்றனர். மாணவர்கள் அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர். மனதை ஒருநிலைப்படுத்துவதால் எளிதில் படிக்க முடிகிறது. ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனச்சிதறல் இன்றி கவனிக்கின்றனர். இந்த தியானத்தை மாணவர்கள்வீட்டிலும் செய்வதால் அமைதியான நிலை ஏற்பட்டு பண்படுகின்றனர். மேலும் இந்த அமைப்பினர் தங்களது பயிற்சி மையத்திலும் இலவசமாக அனைவருக்கும் கற்றுத் தருகின்றனர். சமீபத்தில் சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்ற மாணவர்களும் கிடைக்கும் பலன்களை இதோ பகிர்கின்றனர்.எளிதில் படிக்க முடிகிறதுஇதய நிறைவு தியானத்தால் எளிதில் படிக்க முடிகிறது. மனதை ஒருநிலைப்படுத்த முடிகிறது. மனதில் தீய எண்ணம் வரவில்லை. அமைதியான எந்த இடமாக இருந்தாலும் இந்த தியானத்தை மேற்கொள்ள முடிகிறது. வீட்டில் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மனநிலையில் மாற்றம் ஏற்படும். அப்போது தியானத்தை மேற்கொண்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தால் எளிதில் படிக்க முடிகிறது.-மாரீஸ்வரி, மாணவி, பிளஸ் 2தெய்வீக மனநிலைதியானம் செய்வதால் படிப்பது எளிதில் மனதில் பதிவாகிறது. இதயத்திலிருந்து செய்யப்படும் தியானம் என்பதால் ஒரு தெய்வீக மனநிலை ஏற்படுகிறது. தொடர்ந்து தங்கு தடையின்றி படிக்க முடிகிறது. கோபம், எரிச்சல் போன்றவற்றிலிருந்து முற்றிலும் விடுபட முடிகிறது. மேலும் சக மாணவியரிடம் நட்புடனும், பொறாமையின்றியும் பழக முடிகிறது. தியானத்தால் எப்பொழுதும் மனதில் அமைதியான நிலை ஏற்படுகிறது. இதை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும்.-சிவபிரகாஷினி, மாணவி, பிளஸ் 2எளிதில் புரிகின்றனர்மாணவர்களின் கல்விக்காக யோகா, வழிகாட்டுதலும் அறிவுரை பகிர்தலும் , மதிப்புணர்வுக் கல்வி என பல்வேறு பயிற்சிகளை கற்றுத் தருகிறோம். தற்போது மாணவர்களின் படிப்பிற்காக இதய நிறைவு தியானம் கற்றுத் தரப்படுகிறது. இந்தத் தியானம் செய்த பிறகு மாணவர்களின் ஒழுங்கீனங்கள் குறைந்துள்ளது. தவறு செய்த மாணவர் உடனடியாக தனது தவறை உணர்ந்து மாற்றிக் கொள்கிறார். பாடங்களை கவனித்தும் எளிதில் புரிந்து கொள்கின்றனர்.-நாராயணசாமி, தலைமையாசிரியர், இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி,படிப்பில் கவனம் ஏற்படும்ஒவ்வொருவரின் இதயத்திலும் தெய்வீக ஒளி உள்ளது. அனைருக்குள்ளும் இறைவன் இருக்கிறான். அதை உணர்ந்து இதயத்திலிருந்து தியானம் செய்ய வேண்டும். இதனால் மன அழுத்தத்திலிருந்து விடுதலை ஏற்படுகிறது. மனதிற்கும் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் தியானம் செய்வதால் மனபாரம் குறைகிறது. நிம்மதியான உறக்கமும் வருகிறது. இதை மாணவர்கள் கற்றுக் கொண்டால் , படிப்பில் கவனம் ஏற்படும். கவனமின்மை குறைந்து மனதை ஒருநிலைப் படுத்தி படிக்க முடியும்.--லதா, பயிற்சியாளர், சகஜ மார்க்க இயற்கை வழி தியானம், சிவகாசி.தேர்ச்சி விகிதம் அதிகரிக்கிறதுபயிற்சி மையத்திற்கு வருகிற அனைவருக்கும் இதய நிறைவு தியானம் பற்றி இலவசமாக பயிற்சி அளிக்கிறோம். ஏதேனும் பிரச்னையால் வருகின்றவர்கள் , தியானம் செய்தவுடன் மனது லேசாகிச் செல்கின்றனர். பள்ளிகளில் தியானத்தை கற்றுக் கொண்ட மாணவர்களிடம் ஒழுங்கீனங்கள் குறைந்துள்ளது. மேலும் மனதை ஒருநிலைப் படுத்தி படிக்கின்றனர். தேர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது.-நவநீத கிருஷ்ணன், பயிற்சியாளர் சகஜ மார்க்க இயற்கை வழி தியானம், சிவகாசி,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X