'நிதி பயன்பாட்டில் கவர்னர் முறைகேடு'

Added : அக் 14, 2018
Advertisement

புதுச்சேரி:''விதிமுறைகளை மீறி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் - சி.எஸ்.ஆர்., - கவர்னர் கிரண்பேடி, நிதி வசூலித்து, முறைகேடாக பயன்படுத்துகிறார்,'' என, முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவரது பேட்டி:கவர்னரின் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற தேவநீதிதாசை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மீறி, சிறப்பு அதிகாரி மற்றும் தன் ஆலோசகராக கவர்னர் கிரண்பேடி நியமித்துள்ளார்.கோப்புகளை பார்ப்பது, அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பது, அதிகாரிகளை அழைப்பதற்கு, கவர்னரின் ஆலோசகருக்கு அதிகாரமில்லை. ஆனால், அவர் அந்த பணியை செய்து வருகிறார்.
அவரை நீக்குமாறு, உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.மத்திய மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களில் இருந்து, புதுச்சேரி வளர்ச்சிக்காக, சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தில் - சி.எஸ்.ஆர்., - நிதி பெற, முதல்வர் தலைமையில் கமிட்டி உள்ளது. இதன் மூலம் வசூலிக்கப்படும் நிதி, அரசு துறைக்கு தேவையான கருவிகள் வாங்கவும், ஸ்மார்ட் கிளாஸ், கழிப்பறை கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பல நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொண்டு, கவர்னர் அலுவலகம், சி.எஸ்.ஆர்., திட்டத்தில் பணம் வசூலிக்கிறது. இதுவரை, 85 லட்சம் ரூபாய் வரை வசூலித்து உள்ளனர்.வெளிப்படை நிர்வாகம், ஊழல் இல்லாத நிர்வாகம் என கூறும் கவர்னரின், சி.எஸ்.ஆர்., நிதி செலவில் வெளிப்படை தன்மை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


கிரண்பேடி மறுப்பு


கவர்னர் கிரண்பேடி கூறியதாவது:கவர்னரின் அழைப்பை ஏற்று, பொதுப்பணி துறை அடையாளம் காட்டிய வாய்க்கால்களை, தொழில் நிறுவனங்கள் மூலம் துார்வாரும் பணி நடந்தது. இதுவரை கவர்னர் மாளிகை மூலம் ஒரு காசோலை கூட பெறப்படவில்லை.சமூக வலைதளத்தில் என் வேண்டுகோளை ஏற்று, தொண்டு செய்ய விரும்பியவர்கள், துார்வாரும் கான்ட்ராக்டரிடமே நேரடியாக நிதியை கொடுத்து, பணியை மேற்கொண்டனர்.
இப்பணி மற்றும் அதற்கான நிதி சி.எஸ்.ஆரில் வராது.தேவநீதிதாஸ் ஓய்வுக்கு பின், அவர் பணியில் தொடர, நான் விரும்பினேன். மத்திய உள்துறை அமைச்சக ஒப்புதலுடன், தேவநீதிதாஸ் பணி அமர்த்தப்பட்டார். யூனியன் பிரதேச சட்டப்படி அவர், கவர்னர் ஒதுக்கும் பணியை, செய்து வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X