பொது செய்தி

தமிழ்நாடு

கைகொடுக்கிறது, 'ஸ்மார்ட் காலண்டர்'

Added : அக் 14, 2018
Advertisement
 கைகொடுக்கிறது, 'ஸ்மார்ட் காலண்டர்'

'அரைக்காசு வாங்கினாலும் அரசு உத்தியோகமா இருக்கணும்'ணு பெரியவங்க அடிக்கடி சொல்லி, சொல்லி வளர்த்ததாலோ என்னவோ, கவர்மென்ட் வேலைக்கு அடித்துக் கொள்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.'புத்திசாலித்தனத்துடன், பள்ளியில் இருந்தே இதற்கான டிரைனிங்கை துவக்கினால், அசால்ட்டாக கவர்மென்ட் ஜாப் தட்டிச் செல்லலாம்' என்கிறார், கோவையை சேர்ந்த நித்யா,29. இவர், தற்போது, டி.சி.எஸ்.,ல் புராஜெக்ட் மேனேஜராக இருக்கிறார்.குழந்தைகளுக்கான, 'அப்ஜெக்டிவ்' டைப் கேள்விகள் அடங்கிய ஸ்பெஷல் 'ஸ்மார்ட் காலண்டரை' வடிவமைத்து அசத்தியுள்ளார் அவர்.அவர் சொல்வதை கேளுங்கள்...காலேஜ் முடிச்சு, வேலை தேடிட்டு இருந்த சமயம். ஐ.டி., இன்டர்வியூனாலே, 'ஆப்டிடியூடு' கேள்விகள் இருக்கும். இதை சமாளிக்க பல புத்தகங்களை புரட்டினேன். எனக்கு நானே, தினமும் பல அப்ஜெக்டிவ் கேள்விகள். அதற்கான ஈஸி மெத்தேடு, டிரிக்ஸ் அனைத்தும் அடங்கிய, டைம் டேபிள் தயாரித்தேன். நல்லாவே, 'ஒர்க் அவுட்' ஆச்சு.ஆறு மாச முயற்சியில் காலண்டரை தயார் செஞ்சு, 'பிளாஸ்மா அகாடமி கேலண்டர்'ணு பேர் வெச்சேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. தெரிஞ்ச பிரண்ட்ஸ், டீச்சர்ஸ், ஸ்டூடண்ட்ஸ், வங்கி, டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., படிக்கறவங்கன்னு ரெண்டு மாசத்துல, 497 பேர் வாங்குனாங்க.தினமும், 20க்கும் மேற்பட்ட தலைப்புகள்ல, போட்டித்தேர்வுக்கான, 'அப்ஜெக்டிவ்' கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். பதிலளிக்க சாயங்காலம் வரை டைம் குடுக்கிறோம். 'வாட்ஸ்ஆப்' குரூப் மூலம் சாயங்காலம், 6:00 மணிக்கு பதில்களை அனுப்புறோம்.ஸ்கூல் குழந்தைகள்கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் இருக்குணு, பேரன்ட்ஸ் சொல்ல கேட்கும்போது சந்தோசமா இருக்கு.மூச்சு விடாமல், கடகடவென கூறி முடித்தார் நித்யா.படிச்சு முடிச்சாச்சா...நீங்களும் 'டிரை' பண்ணி பாருங்களேன்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X