பொது செய்தி

தமிழ்நாடு

ஓர், ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர்!

Added : அக் 14, 2018
Advertisement

திசை தெரியாவிடினும் ஓடு... ஓடினால் ஒரு வேளை திசை கிடைக்கும்... முகமறியா கவிஞனின் வார்த்தைகள் இது. ஆனால், வெற்றியின் இலக்கைத் தொட்டதும், அடுத்த இலக்கை குறி வைத்து ஓடுவது, அசாத்தியம். அதை, 'அசால்ட்' ஆக செய்து கொண்டிருக்கிறார், கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன்,32.வாழ்க்கையில் டாக்டராக வேண்டுமென நினைத்தார்; ஆகி விட்டார். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, வேண்டுமென முயன்றார்; தேசிய அளவில், 'ரேங்கிங்' பெற்று, தமிழகத்திலேயே பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். அத்துடன் ஓய்ந்து விடவில்லை; ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்புவை போல், எழுத்தாளராக வேண்டுமென, அடுத்த இலக்கை நிர்ணயித்து, மூன்றாண்டுகளில், நான்கு புத்தகங்கள் எழுதி, இளைஞர்களுக்கு, 'ரோல் மாடல்' ஆக வலம் வருகிறார்.அவர், கடைசியாக எழுதியிருப்பது, Once Upon An IAS EXAM என்ற ஆங்கில நாவல். நம் நாட்டில் உள்ள தலைசிறந்த பதிப்பகங்களில் ஒன்றான, ரூபா பதிப்பகம், இதை வெளியிட்டுள்ளது; இந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில், அதிகளவு விற்பனையான புத்தகங்கள் பட்டியலை 'அமேசான்' வெளியிட்டுள்ளது; அதில், இப்புத்தகம், 34ம் இடத்தைப் பிடித்திருப்பது இன்னும் சிறப்பு.வாசிப்பை விட்டு, இன்றைய தலைமுறை வெகுதொலைவில் போய்க் கொண்டிருக்கும் நிலையில், இவரது புத்தகங்கள், வாசிப்பை நேசிக்க வைக்கின்றன. ஒரு நண்பனிடம் உரையாடுவதை போல், மிக எளிமையாக இருப்பதே, இவரது எழுத்தின் பலம்; தனித்துவமான அடையாளம்.விஜயகார்த்திகேயனோடு பேசினோம்...எம்.பி.பி.எஸ்., படித்தவன். டாக்டராக பொதுமக்கள் பிரச்னைகளை நன்கறிந்தேன். அப்போது, மக்கள் பிரச்னைகளுக்கு என்னால் முடிந்த தீர்வை தர, எதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஐ.ஏ.எஸ்., ஆனேன். அடுத்த நிலையே எழுத்தாளர். எப்படி ஐ.ஏ.எஸ்., ஆனேன்; எப்படி படிக்க வேண்டும் என இளைஞர்களுக்கு வழிகாட்ட, 'எட்டும் துாரத்தில் ஐ.ஏ.எஸ்.,' புத்தகத்தில் எழுதினேன். இதற்கு கிடைத்த வரவேற்பு, தொடர்ந்து எழுத துாண்டியது.கடுமையான பணிச்சூழலில் எனக்கென்று நேரம் தேவை. அதை சரியாக பயன்படுத்தினால், தனித்திறனும் மேம்படும் என எண்ணினேன்; எழுத ஆரம்பித்தேன். எனது மன எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. தினமும் எவ்வளவு வேலை இருந்தாலும், இரவில், 12 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் ஒதுக்கி, எழுதுவேன்; அழுத்தம் நீங்கி, மனம் லேசாகிறது.'அதுவும் இதுவும்' புத்தகத்தில் சுதந்திரம் - -சுயக்கட்டுப்பாடு, வெற்றி - -தலைக்கனம், நம்பிக்கை - -மூடநம்பிக்கை, விருந்தோம்பல்- - தன்னலம், பொறுமை - -ஏமாளித்தனம் என ஒன்றோடு ஒன்று முரணான விஷயங்களை அலசி இருப்பேன்.'ஒரே கல்லில் 13 மாங்காய்' இலக்கையும் தாண்டி வெற்றியை எப்படி அடைவது என்பதை சொல்லும் தன்னம்பிக்கை புத்தகம். அதில், 'கல்' என்பது நமது மனம்.'0nce upon an IAS EXAM'(ஒன்ஸ் அப்பான் அன் ஐ.ஏ.எஸ்., எக்ஸாம்) என்ற ஆங்கில நாவல், முதலில் எழுத துவங்கி, பாதியில் நின்று போனது; மீண்டும் எழுதி முடித்துள்ளேன். நான் சந்திக்கும் மனிதர்கள், வாழ்வியல் அனுபவங்களே இந்நாவல். விரைவில் தமிழாக்கம் வெளிவரும். இன்னொரு ஆங்கில 'திரில்லர்' நாவல் எழுதும் பணியை துவக்கி விட்டேன்; அதையும், ரூபா பதிப்பகமே வெளியிடுகிறது.எழுத்தாலும் சொல்லாலும் எதையும் மாற்ற முடியும் என தீர்க்கமாக நம்புகிறவன். அந்த எழுத்துக்களை எளிமையாக அமைத்து, சொல்ல வந்த கருத்துக்களை எல்லோரிடமும் எடுத்துச் செல்ல முயற்சிக்கிறேன். மனசை திறந்து வைத்து விட்டு படிங்க; உங்க மனசோடு சேர்ந்து வாழ்க்கையும் இன்னும் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறும்!இப்படி எழுத்திலும், பேச்சிலும் தன்னம்பிக்கை தருகிறார், சாதனை 'ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர்!'வாழ்த்த, kvijai007@yahoo.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X