பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணங்களிலும் வண்ணங்களிலும் கலாம்

Added : அக் 14, 2018
Advertisement
 எண்ணங்களிலும் வண்ணங்களிலும் கலாம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, கின்னஸ் சாதனை முயற்சி மூலம், நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.'ஏசியன் பெயிண்ட்ஸ்' சார்பில், அப்துல் கலாம், 87வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதிய கின்னஸ் மற்றும், 'ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' முயற்சி மேற்கொள்ளப்பட்டது.'எண்ணங்களிலும், வண்ணங்களிலும் கலாம்' என்ற தலைப்பில், பீளமேடு பன்மாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கலாம் உருவப்படத்துக்கு, ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள், ஒரே நேரத்தில் வண்ணம் தீட்டினர்.'ஏசியன் பெயிண்ட்ஸ்' தலைமை நிர்வாக அதிகாரி அமீத் சிங்லே பேசுகையில், ''இளைஞர்களுக்கு உத்வேகம் தருபவராக அப்துல் கலாம் இருக்கிறார். அவரது தாக்கத்தை மாணவர்கள் இடையே ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.கலாம் உறவினர்களான ஷேக் சலீம், ஷேக் தாவூத் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X