பொது செய்தி

தமிழ்நாடு

புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு: இயற்கை விவசாயிகள் கவுரவிப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு: இயற்கை விவசாயிகள் கவுரவிப்பு

அன்னுார்:புளியம்பட்டி புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.அன்னுார் அருகே உள்ள புளியம்பட்டி, நகராட்சி மண்டபத்தில் புத்தக கண்காட்சி கடந்த, 10ம் தேதி துவங்கியது. இதில், முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.பல்வேறு தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனுமதி இலவசம். புத்தகங்களுக்கு, 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்திய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, இயற்கை விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 10 இயற்கை விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர்.எழுத்தாளர் கோவை சதாசிவம் பேசுகையில், ''மரபு சார்ந்த விவசாயம் தான் மண்ணுக்கு ஏற்றது. ரசாயன பயன்பாட்டால் நோய் அதிகரித்து விட்டது. இயற்கைக்கு திரும்ப வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில் கபடி, சிலம்பாட்டம், நொண்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடந்தன.பேச்சாளர்கள் ரவிக்குமார், ராஜேந்திரன், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.இன்று மாலை நிறைவு விழாவில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சாதனை மாணவ, மாணவியர், 200 பேர் கவுரவிக்கப்படுகின்றனர். சினிமா இயக்குனர் சுந்தரராஜன் பங்கேற்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X