பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீருக்காக தவமிருக்கும் குட்டை! நீர்வழித்தடங்களை தூர்வாராமல் அசட்டை

Added : அக் 14, 2018
Advertisement
 தண்ணீருக்காக தவமிருக்கும் குட்டை! நீர்வழித்தடங்களை தூர்வாராமல் அசட்டை

செங்கத்துறை;சூலுார் ஒன்றியத்தில் உள்ளது செங்கத்துறை கிராமம். இங்கு, 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளித்தோட்டம் குட்டையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் ஓரளவு நீர் நிறைந்துள்ளது.ஆனால், காடாம்பாடி பகுதிகளில் இருந்து குட்டைக்கு நீர் வந்து சேரும் ஓடைகள் முழுக்க ஆக்கிரமிப்பிலும், முட்செடிகள் நிறைந்து புதராகவும் உள்ளது. இதனால், குட்டையின் கால்வாசி அளவுக்கு கூட இன்னமும் நீர் நிரம்பவில்லை.
இந்தக் குட்டையில் நீர் நிறைந்தால், அதன் பின்னர் கலங்கலில் வழியும் நீர், கருப்பராயன் கோவில் வழியில் வாய்க்கால் வழியாக ஓடி நொய்யலில் கலக்கும். அந்த வழித்தடமும் முழுக்க புதர்கள் மண்டித்தான் கிடக்கிறது.இந்த கால்வாய் வழியே செங்கத்துறை முதல் குமாரபாளையம் செல்லும் சாலை குறுக்குவெட்டாக கடக்கிறது. அதிலும் தரைப்பாலம் கட்டப்படவில்லை. எனவே, மழைநீர் வழிந்தோடினால், போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் தான் உள்ளது.
வெள்ளித்தோட்டம் குட்டையை சுற்றி, நாலாபுறமும் தோப்புகள் நிறைந்துள்ளன. அவற்றில் ஏராளமான ஆழ்துழாய் கிணறுகள் உள்ளன. எனவே, குட்டை நீர் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். அதனால் விவசாயம் செழிக்கும்.எனவே, குட்டையை துார்வாரி தயாராக வைத்திருப்பது போல, நீர்வழித்தடங்களையும் சீர்செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறையும், அசட்டையாக இருக்காமல் இப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X