பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷ யாத்திரை: பாரம்பரியம் பாதுகாக்க வலியுறுத்தல்

Added : அக் 14, 2018
Advertisement
 கோவையில் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷ யாத்திரை: பாரம்பரியம் பாதுகாக்க வலியுறுத்தல்

கோவை:சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிப்பதை எதிர்த்து, கோவையில் ஐயப்ப பக்தர்களின் சரண கோஷ யாத்திரை நடந்தது.'கோயமுத்துார் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம்' சார்பில் சரண கோஷம் யாத்திரை நேற்று நடந்தது. சித்தாபுதுார் ஸ்ரீஐயப்பன் கோவிலிலிருந்து புறப்பட்ட யாத்திரைக்கு, சேவா சங்கத்தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தனர்.
பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஜி.பி.சிக்னல், காந்திபுரம் வழியாக வந்து சித்தாபுதுார் வி.கே.கே. மேனன் ரோட்டில் நிறைவடைந்தது.நிறைவு நிகழ்ச்சியில் மத்திய கயிறு வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று யாரும் சொல்லித்தர தேவையில்லை. 48 நாட்கள் விரதம் இருந்து, ஐயப்பனை நினைத்து உருகுபவர்கள், ஐயப்ப பக்தர்கள். வயதில் சிறியவர்களாக இருந்தால் கூட, ஐயப்ப பக்தர்கள் என்றால், அனைவரும் மரியாதை அளிப்பர்.நம் இந்து மத தர்மம், நமது முன்னோர்களில் இருந்து தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது. இந்த கலிகாலத்தில் முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் இதை அழித்து விடமுடியாது. பாரம்பரிய கலாசாரத்தையும், ஆன்மிக நடைமுறைகளையும் மாற்ற முடியாது.தாயை, இறைவனுக்கு நிகராக மதிக்கக்கூடியது இந்து மதம். தாய்மார்களால் தான் இந்து தர்மம் காக்கப்படுகிறது.
அவர்களால் தான் இந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் பேசினார்.பெண்கள் சார்பில், சேவா சங்கத்தின் சுஜாதா பேசுகையில், ''சபரிமலைக்கு, 50 வயது வரை காத்திருந்து செல்ல தயாராகவுள்ளோம். எந்த பெண்ணும், குறிப்பிட்ட வயதுக்கு முன் சபரிமலை செல்ல ஆசைப்படவில்லை. பம்பா நதியின் புனிதத்தை அசுத்தப்படுத்த விரும்பவில்லை. சபரிமலையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்.நிழ்ச்சியில், ஆர்ய வைத்திய பார்மசி சேர்மன் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பெண் நீதிபதிக்கு பாராட்டு'சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு தடையில்லை' என்று உச்ச நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள் கூறியநிலையில், ஐந்தாவது பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா, தனது தீர்ப்பில், 'ஐயப்பனை பெண்கள் யாரும் வழிபடக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை.
சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்கள் மட்டுமே செல்லவேண்டும் என்கிற நடைமுறை இருப்பதால், இதை பெண்களுக்கு எதிரானது என்று கூறமுடியாது. பாரம்பரிய நடைமுறையில், நீதிமன்றம் தலையிட முடியாது' என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார். எனவே, இந்து மல்ஹோத்ராவின் தீர்ப்பை வரவேற்று சரண கோஷம் யாத்திரை நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X