அரசியல் செய்தி

தமிழ்நாடு

கீழடியில் அகழ் வைப்பகம்: அமைச்சர் தகவல்

Added : அக் 14, 2018
Advertisement
கீழடியில்  அகழ் வைப்பகம்: அமைச்சர் தகவல்

திருப்புவனம்:''ஆதிச்சநல்லுார், அழகன்குளம், கீழடி ஆகிய 3 இடங்களிலும் 'அகழ் வைப்பகம்' வைக்க மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டு உள்ளது,'' என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தொல்லியல் துறை இயக்குனர் உதயசந்திரன், இணை இயக்குனர் சிவானந்தம் பார்வையிட்டனர்.
அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏப்.,18 முதல் செப்., 30 வரை 34 குழிகளில் ஆய்வு நடத்தியதில் தங்க காதணி, தமிழ் பிராமி எழுத்துக்கள், மனித உருவ சுடுமண் அச்சு, மருந்து குடுவைகள் உள்ளிட்ட 5,820க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் 4 கட்ட அகழ்வாய்வில் 6 தங்க பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. 5 வது கட்ட ஆய்விற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
ஆதிச்சநல்லுார், அழகன்குளம், கீழடி ஆகிய 3 இடங்களிலும் 'அகழ் வைப்பகம்' வைக்க மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டு உள்ளது. அமர்நாத் அறிக்கை தயாரிக்கும் விவகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது, தமிழக அரசின் 16வது அருங்காட்சியகம் கீழடியில் விரைவில் அமையும். கீழடியில் அகழ்வாய்வு நடத்துவதில் எந்தவொரு தொய்வும் இல்லை. அகழ்வாய்வு தகவல்களை மறைக்கும் எண்ணம் இல்லை.
கார்பன் டேட்டிங் முறையில் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் ஆய்வு மேற்கொண்டு உள்ளதால் அறிக்கை கிடைப்பதில் கால தாமதம் ஆகிறது.17 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆதிச்சநல்லுார் அகழாய்வு அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் மாநில அரசுக்குகிடைக்கும், ஆதிச்சநல்லுாரில் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் கட்டி 5 வருடங்கள் ஆகிறது. பொருட்களை காட்சிப்படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X